{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gf94d93t/", "data": {"id": "gf94d93t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gf94d93t/", "kind": "word", "headword": "சைபர் பங்க்", "romanization": "caipar paṅk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:12.730356+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரைடர் போன்ற அறிவியல் புதினங்களில் இருந்து தோன்றிய சொற்கள் cybercafe or cyber cafe : மின் வெளி உணவகம் : 1. இணையத் தொடர்புகள் உள்ள கணினி முனையங்களைக் கொண்ட சிற்றுண்டி விடுதிகள். இங்கே காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே இணையத்தில் உலா வரலாம். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாப்பிட வருபவர்கள் இணையத்தைப் பார்வையிடவும், இணையத்தில் உலாவ வருபவர்கள் சாப்பிடவும் இங்கே வாய்ப்புக் கிடைக்கிறது. 2. இணையத்தில் இருக்கின்ற ஒரு மெய்நிகர் (virtual) உணவகம். இது பெரும்பாலும் சமூகப்பயன்களுக்கானது. இங்கே கூடுபவர்கள் அரட்டை நிகழ்ச்சி மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வர். அறிக்கைப் பலகை முறை யில் செய்திகளைப் பரிமாறிக் கொள்வர். செய்திக் குழுக்கள் மூலமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர். Cyberdog : சைபர்டாக் : ஆப்பிள் நிறுவனத்தின் இணையப் பயன்பாட்டுக்கான கூட்டுத் தொகுப்பு. இதில் இணைய உலாவி மற்றும் மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளன. ஒப்பன்டாக் (OpenDoc) என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய பயன்பாடுகளுடன் எளிதாக சேர்த்து இணைத்துச் செயல்படுத்த முடியும். cyber law : மின்வெளிச் சட்டம். cybernaut : சைபர்நாட் : மின்வெளி வீரர்; மின்வெளியாளி : எப்போதும் தன் வளமான நேரங்களை இணையத்தில் உலா வருவதிலேயே செலவழிப்பவர். இன்டர்நாட்/ இணைய வீரர் என்றும் அழைக்கப்படுவார். cybernetic system : தன்னாள்வியல் முறைமை : சுய காணிப்பு மற்றும் சுயக் கட்டுப்பாட்டுத் திறனை அடைய கட்டுப்பாடு மற்றும் திரும்பப் பெறும் பகுதிகளைப் பயன்படுத்தும் அமைப்பு. cyberphobia : சைபர்போபியா : கணினிகளைக் கண்டு அஞ்சுதல். cyberspace : மின்வெளி : நியூரோ மான்சர் என்னும் புதினத்தில் வில்லியம் கிப்சன் உருவாக்கிய சொல் இணையப் பண்பாட்டை இது குறிப்பிடுகிறது. cyborg : சைபோர்க் : மின்னணு மற்றும் மின்னியந்திர ரோபோவின் உறுப்பினை வைத்திருக்கும் மனிதர். cycle : சுழற்சி : கணினி சேமிப்பகம் தொடர்பானது. ஒரு கணினி அல்லது அதன் சேமிப்பக சாதனத்தில் இருந்தோ, அதற்கோ தகவலை மாற்றல் செய்யும்போது ஏற்படும் தொடர் நிகழ்வுகள். ஒரு முகவரியைக் குறிப்பிட்டு, அதன் தகவலை வெளியேற்றி அடுத்ததைத் தேடத் தயாராக இருத்தல். cycle code சுழற்சிக் குறிமுறை. cycle per second : ஒரு நொடிக்கு சுழற்சி : ஒரு நொடியில் எத்தனை தடவைகள் ஒரு நிகழ்வு அல்லது நிகழ்வுகளின் தொகுதி திரும்பச் செய்யப்படுகிறது என்பது. பார்க்க : ஹெர்ட்ஸ். cycle power : சுழற்சித் திறன் : நினைவகத்தில் உள்ள சில தரவுகளை துடைக்கும் பொருட்டு அல்லது கணினி செயலிழக்கும்போது அதற்குப் புத்துயிர் ஊட்டும் பொருட்டு கணினிக்குத் தரும் மின்சாரத்தை நிறுத்தி, மீண்டும் வழங்குவது. cycle stealing : சுழற்சித் திருடல் : உள்ளிட்டு வெளியீட்டு மின்பாட்டையின் கட்டுப்பாட்டைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து வெளிப்புறச் சாதனம் ஒன்றை அனுமதிக்கும் நுட்பம். இதன்மூலம் கணினியில் உள் நினைவகத்தை அணுக அந்தச் சாதனம் அனுமதிக்கப்படுகிறது. cycle reset : சுழற்சி மாற்றமைவு : சுழற்சி திரும்ப அமைதல். cycle time : சுழற்சிநேரம் : 1. தொடர் செயலின் தொடக்கத்தில் இருந்து சேமிப்பக இருப்பிடத்திற்குப் போய்ச் சேரும் வரை இடைவெளியின் குறைந்தபட்ச நேரம். 2. ஒரு பதிவுத் தொகுதியில் தகவலை மாற்ற தேவைப்படும் நேரம். cyclic binary code : சுழற்சி இருமக் குறிமுறை : இரும எண் முறையில் ஒரு வகை. பதின்ம எண்களை (Decimal Numbers) இரும வகைக்கு மாற்றும்போது எந்தவொரு இரும எண்ணும் முந்தைய இரும எண்ணோடு ஒப்பிட்டால் ஒரேயொரு துண்மி (bit) மட்டுமே மாறி இருக்க வேண்டும். 0111, 0101 ஆகிய இரு எண்களில் நடுத் துண்மி மட்டுமே மாறி இருக்கிறது. சாதாரண இரும எண் முறையிலிருந்து மாறுபட்டது. பதின்மம் சுழற்சி இருமம் சாதா இருமம் cyclic code : சுழற்சிக் குறியீடு : சாம்பல் குறிமுறை (gray code) போன்றது. Cyclic Redundancy Check (CRC) : சுழற்சி மிகைச் சரிபார்ப்பு : வட்டுச் சாதனங்களில் பிழை சோதிக்கும் முறை. தரவுகளைச் சேமிக்கும்போது சி. ஆர்சி மதிப்பு மீண்டும் கணிக்கப்படுகிறது. இரண்டு மதிப்புகளும் சமமாக இருந்தால், அந்த தரவு பிழையற்றது என்று கருதப் படுகிறது. cyclic shift : சுழல் நகர்வு : ஒரு முனையில் விலக்கப்படும் எண் மறுமுனையில் சுழற்சி போன்று சேர்ந்து கொள்ளும் மாற்றம். ஒரு பதிவகத்தில் 23456789 என்னும் எட்டு இலக்கங்கள் இருக்குமானால் இரண்டு பத்தி களில் இடதுபுறமாக சுழற்சி நுகர்வு செய்தால் மாற்றப்பட்ட உள்ளடக்கம் 45678923 என்று இருக்கும். Cycolor : சைகாலர் : மீட் இமேஜிங்கின் அச்சிடும் செயல் முறை. ஒளிப் படங்களைப் போல முழு டோனல் உருவங்களை இவை அச்சிடும். cylinder : உருளை : ஒவ்வொரு வட்டின் பரப்பிலும் ஒரே இடத்தில் தங்குகின்ற அனைத்துத் தடங்களின் மொத்தம். வட்டு தட்டுகளில், ஒவ்வொரு மேற்பரப்பிலும் அதே தடத்தில் உள்ள தடங்களின் மொத்தம் cylinder addressing : உருளை முகவரியிடல் : ஒவ்வொன்றுக்கும் ஒரு உருளை எண், மேற்பரப்பு எண் மற்றும் பதிவேடு கூட்டல் எண் ஆகியவற்றைக் கொடுத்து வட்டு பதிவேடுகளைத் தேடும் முறை. cylinder method : உருளை முறை : படி/எழுது முனைகளை இயக்குவதன் மூலம் நடப்பில் பயன்படுத்தப்படுகின்ற தடத்திற்கு மேலும் கீழும் உள்ள தரவுகளைப் பெறலாம் என்ற கோட்பாடு அல்லது முறை. அணுகுசாதனத்தில் கூடுதல் இயக்கம் இல்லாமலேயே அதிக அளவு தகவல் அணுக அனுமதிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "cyberbunk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 366"}]}}