{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gd66ebkf/", "data": {"id": "gd66ebkf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gd66ebkf/", "kind": "word", "headword": "ஏகனாகி ஒற்றுமைப்படுதல்", "romanization": "ēkaṉāki oṟṟumaippaṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:09.261706+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதுபற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு சிவஞான முனிவர் எடுத்துக் காட்டுகிறார். \"ஈண்டு ஏகனாகி ஒற்றுமைப் படுதலாவது\" 1. குடிமுடைந்த வழிக் குடகாய மும் மகா காயமும் ஒன்றாதல் போல ஒற்றுமைப்படுதலா? 2. அன்றி, இப்பியை வெள்ளியென்பது போலத் திரிபுக் காட்சியால் ஒற்றுமைப்படுதலா? 3.அன்றி, மண்ணே குடம் என்பது போல ஒன்று திரிந்து ஒன்றாய் ஒற்றுமைப்படுதலா? 4.அன்றி, வெள்ளையும் தாமரையும் போலக் குணகுணித் தன்மையால் ஒற்றுமைப்படுதலா? 5.அன்றி, தீயும் இரும்பும் போல ஒன்றினொன்று விரவுதலால் ஒற்றுமைப்படுதலா? 6. அன்றி, பாலும் நீரும்போலப் பிரிக்கப்படாத சையோகத்தால் ஒற்றுமைப்படுதலா? 7.அன்றி, கருடனும் மாந்திரிகனும் போலப் பாவனை மாத்திரத்தால் ஒற்றுமைப்படுதலா? 8.அன்றி, காய்ச்சிய இரும்பின் நீர்போல ஒன்றினொன்று இலயமாகிய ஒற்றுமைப்படுதலா? 9.அன்றி, பேயும் பேய்ப்பிடியுண்டவனும் போல ஆவேசத்தால் ஒற்றுமைப்படுதலா? 10. அன்றி, காட்டத்தின் எரிபோல விளங்காமையால் ஒற்றுமைப்படுதலா? 11. அன்றி, தலைவனும் தலைவியும் போல இன்ப நுகர்ச்சி மாத்திரையால் ஒற்றுமைப்படுதலா? 12. அன்றி, நட்டோர் இருவர் போல நட்பின் மிகுதியால் ஒற்றுமைப்படுதலா? 13.அன்றி,ஆவும் ஆமாவும்போல ஒப்புமை மாத்திரையால் ஒற்றுமைப்படுதலா? என அவ்வச் சமயவாதிகள் மதம் பற்றி நிகழும் இன்னோரன்ன ஆசங்கைகளை எல்லாம் நீக்குதற்பொருட்டு அவனே தானே ஆகிய அந்நெறி என உவமே எடுத்துக்காட்டி ஓதினார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 79"}]}}