{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g3hjk9tu/", "data": {"id": "g3hjk9tu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g3hjk9tu/", "kind": "article", "headword": "பட்டாணிக் குருவி", "romanization": "paṭṭāṇik kuruvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:05.080979+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது குட்டையான, வட்டமான இறகுகளைக் கொண்டிருப்பதால், பறக்கும் திறன் குறைவாகவே காணப் படுகிறது.", "body_ta": "இது குட்டையான, வட்டமான இறகுகளைக் கொண்டிருப்பதால், பறக்கும் திறன் குறைவாகவே காணப் படுகிறது. இதன் குரல் இனிமையாக இருக்கும். நீண்ட தொலைவில் இருந்தும் கூட, இதன் குரலைக் கேட்க முடியும். இறகுகளில் 10 முதனிலை இறகுகளும், 12 கால் இறகுகளும் காணப் படுகின்றன. இப்பறவை பெரும்பாலும் மரங்களில் வாழ்கிறது. சில சமயம், மலைப் புறங்களில் காணப் படுகிறது. பெரும்பாலும், கணுக்காலி, சிலந்தி, நத்தை ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. பட்டாணிக் குருவி முட்டையிடுவதற்கெனத் தனிப் பட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இரு பால் உயிரிகளும், கூடு கட்டுதலில் ஈடுபாடு காட்டுகிறது. முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தல் வெளிப் புறங்களில் நடை பெறுகிறது. இரு பால் உயிரிகளுமே, இனவுயிரிகளைப் பேணிக் காக்கின்றன. எதிர் இனங்களைப் பெறுவதற்காக, வசீகரிக்கும் குரல்களை எழுப்பும். தன் இனங்களுடன் நட்புடன் இருக்கும். இக்குருவி பிற வகைக் குருவிகளிடம் அவ்வாறு இருப்பதில்லை.\n\nபெரும்பாலும் நீளமான வால் பகுதியை உடைய இக்குருவி, மரப் பட்டைகளின் இடுக்குகளில் மிகுதியாக வசிக்கும். ஒரு முறையில் 13 முட்டைகளை இடும். இவற்றைப் பொரித்து, இளவுயிரிகள் வெளி வருவதற்கு 17 நாள்கள் ஆகும். ஓய்வெடுக்கும் போதும், தூங்கும் போதும், கூட்டம் கூட்டமாக இருக்கும். இக்குருவியில் மேலும் 20 துணை இனங்கள் காணப் படுகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை சிவப்புத் தலையுடைய பட்டாணிக் குருவி, நீள வாலுடைய ஜாவா பட்டாணிக் குருவி, புதர்ப் பட்டாணிக் குருவி, கறுப்புப் பட்டாணிக் குருவி ஆகியவையாகும்.\n\nபட்டாணிக் குருவி, ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் காணப் படுகிறது. மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் காண ப்படுவனவற்றில் கண் பகுதியில் கருமையான பட்டை காணப் படும். ஏனையவற்றில் வெண்மை நிறத் தலைப் பகுதி காணப் படுகிறது. —அ. சிவானந்தம்"}}