{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fz49dn42/", "data": {"id": "fz49dn42", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fz49dn42/", "kind": "word", "headword": "துறை எண்", "romanization": "tuṟai eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.546378+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் இணைக்கப்பட்ட கணினியில் ஒரு குறிப்பிட்ட செயலாக்கத்துக்கென ஐபீ பொதிகளை அனுப்பிவைக்கப் பயன்படும் எண். சில துறை எண்கள் நன்கறிந்த துறை எண்கள் என்றழைக் கப்படுகின்றன. உலகளவில் ஒரு குறிப்பிட்ட சேவைக்கென நிரந்தரமாய் ஒதுக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, எஸ்எம்டீபீ யின்கீழ் மின்னஞ்சல் தரவுகள் எப்போதுமே துறையெண் 25-க்கு அனுப்பப் படுகின்றன. எஃடீபீ-க்கு துறை எண் 21. ஹெச்டீடீபீ-க்கு துறை எண்-80. டெல் நெட் போன்ற சேவைகளுக்கு அவை தொடங்கும்போது தற்காலிக நிலையில்லா துறை எண்கள் ஒதுக்கப் படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தில், அந்த எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். முடிந்தவுடன் அந்த எண்ணின் பயனும் முடிந்து விடும். டீசிபீ மற்றும் யுடிபீ நெறிமுறைகளில் மொத்தம் 65, 535 துறை எண்களைப் பயன் படுத்தமுடியும். 1 முதல் 1024 வரை சிறப்புத் துறை எண்கள். நிரலர்கள் தம் சொந்த நிரல்களில் 1024க்கு மேற்பட்ட எண்களையே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "port number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1136"}]}}