{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fu2bwdg7/", "data": {"id": "fu2bwdg7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fu2bwdg7/", "kind": "article", "headword": "இலான்சுடவுன் பிரபு", "romanization": "ilāṉcuṭavuṉ pirapu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.731610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பார் கி.பி. 1883 முதல் கி.பி.", "body_ta": "என்பார் கி.பி. 1883 முதல் கி.பி. 1888 வரை கனடாவில் இங்கிலாந்தின் அரசப் பேராளராகப் பணியாற்றியவர். இவர் ஆட்சிக்காலத்தில், கனடா–பசிபிக்கு இருப்புப்பாதைத் தொடர் அமைக்கப்பட்டது. இலான்சுடவுன் (Lansdowne) இந்தியாவின் அரசப் பேராளராக (Viceroy) விளங்கியதுடன், இங்கிலாந்து அமைச்சரவையில் பொறுப்பும் வகித்தார். வெளியுறவுத் துறையின் செயலராக இருந்தபோது, 1902–ஆம் ஆண்டில் சப்பான் நாட்டுடனும், 1904–இல் பிரான்சு நாட்டுடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ள உறுதுணையாக இருந்தார். இவர் 1927 ஆம் ஆண்டு காலமானார்."}}