{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fezahct6/", "data": {"id": "fezahct6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fezahct6/", "kind": "article", "headword": "அசுத்திவர்மன்", "romanization": "acuttivarmaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.137144+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அசுத்திவர்மன் என்னும் அரசன் சாலங்காயன மரபினைச் சார்ந்தவன்.", "body_ta": "அசுத்திவர்மன் என்னும் அரசன் சாலங்காயன மரபினைச் சார்ந்தவன். இவன் பெத்தவேங்கியிலிருந்து அரசாண்டான். இவ்வூர் ஆந்திரப் பிரதேசத்தில் எல்லூருக்கு 10 கி.மீ. தொலைவிலுள்ளது. குப்த மரபினைச் சார்ந்த சமுத்திர குப்தர் தென்ளாட்டின் மீது படையெடுத்தபோது கோதாவரி ஆற்றிற்கும் கிருட்டிணா ஆற்றிற்கும் இடையிலிருந்து வேங்கியை அசுத்திவர்மன் ஆண்டு வந்தான் என்பதை, அரிசேனர் என்னும் கவிஞர் மெய்க்கீர்த்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இம்மெய்க்கீர்த்தி அசோகரின் அலகாபாத்துக் கற்றூணில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டிலேயே அவன் சாலங்காயன மரபினன் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமுத்திர குப்தர் அசுத்திவர்மனை வென்று கப்பம் கட்டுமாறு பணித்துப் பின் விடுதலையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது."}}