{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/feg33nsn/", "data": {"id": "feg33nsn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/feg33nsn/", "kind": "article", "headword": "சுறவம்", "romanization": "cuṟavam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.834575+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சுறவம் (மகரம்)", "body_ta": "சுறவம் (மகரம்)\n\nதென் வானக் கோளத்தில் கும்ப விண் மீன் குழுவிற்கும் தனுசு விண் மீன் குழுவிற்கும் இடையே உள்ள இலையுதிர் கால விண் மீன் சுறவம் (Capricornus) எனப்படும்., இதை மகர இராசி என்றும் குறிப்பிடுவர். இது இராசிச் சக்கரத்தில் பத்தாம் இராசியாக அமைந்துள்ளது. இதன் அமைப்பு ஆட்டின் தலையும், மீனின் வால் பகுதியும் இணைந்த உருவமாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. நிலவு ஒளியில்லாத போது, கும்ப விண் மீன் குழுவிற்கு மேற்கிலும், தனுசு விண் மீன் குழுவிற்குக் கிழக்கிலும் இக்குழு அமைந்துள்ளமையைக் காணலாம். சுறவ விண் மீன் குழுவின் வல ஏற்றம் (right ascension) 21 மணி ஆகும்; நடுவரை விலக்கம் (declination) 20° S ஆகும். இக்குழுவில் உள்ள மிகவும் அதிக ஒளியுடைய விண் மீனின் பொலிவு பரிமாணம் (magnitude) 3 ஆகும். α-சுறவம் (α-capricornus) ஓர் இரும விண் மீன் (binary star). இவற்றின் பொலிவு பரிமாணம் முறையே 3,7,4,5 ஆகும். இக்குழுவில் கோள விண் மீன் முடிச்சு (globular cluster) M-30 உள்ளது. வானக் கோளத்தில் 413.9 சதுரப் பாகைகள் இடத்தை இக்குழு நிரப்பிக் கொண்டுள்ளது. —பெ. வடிவேல்"}}