{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fde2xypw/", "data": {"id": "fde2xypw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fde2xypw/", "kind": "word", "headword": "சைவ வழிபாடு", "romanization": "caiva vaḻipāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:19.267889+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிவ வழிபாடு நோக்கம்; மெய்யுணர்வு பெறு வது மட்டுமன்றி, மெய்யுணர்வு பெற்றோரும் மேற்கொள்ளும் ஒழுக்கம். நாற்படிகள், 'இதில் சைவ சித்தாந்திற்கே உரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் அடங்கும். விளக்கம்; கோயிலை வலம் வருதல். சரியை அருச்சனை புரிதல். கிரியை கொடி மரத்தின் கீழி ருந்து தியானஞ் செய்தல் யோகம். பரம்பொருளோடும் ஒன்று நிலை ஞானம். ஆலயத்தைச் சிவன் என்று வழிபட வேண்டும். கோபுர வாயில் வழியாக உள்ளே சென்று வலம் வந்து கொடி மரத்தின் வழியாகக் கோயிலி னுள் புகுந்து திருமூலப் பெரு மானைப் பூசனை செய்து வழிபட வேண்டும். சைவ வழிபாட்டில் திருநீறுப் பூசுதலும் உருத்திராக்கம் அணி தலும் திருவைந்தெழுத்து ஒது தலும் குருவிடம் தீக்கை பெறு தலும் நீராடுதலும் இன்றியமை யாதவை. வழிபாட்டில் பயன் படுத்தும் பொருள்களையும் நம் உறுப்புகளையும் உரிய முறையில் தூய்மை செய்ய வேண்டும். வழிபாட்டிற்குத் தேவையான தெய்வத் தன்மை பெற வேண்டும். மனத்தை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வழிபட வேண்டும். திருஞான சம்பந்தர் முதலிய அருளாளர்கள் தாம் ஞானம் பெற்ற போதிலும், அடியார் கூட்டத்தோடு தலங்கள் தோறும் சென்று வழிபட்டது. இங்கு நினைவு கூரத்தக்கது. ஆலய வழிபாட்டில் வலம் வருவதால், மல மறைப்பு நீக்கு வதற்கேற்ற மந்ததர அறிவுப்பக் குவம் உண்டாகும். கிரியை யால் மந்த பக்குவமும் யோகத் தால் தீவிரப் பக்குவமும் உண் டாக்கிச் சிவஞானம் விளங்கத் துணை செய்யும் என்பது வெளிப்படை... \"அம்மலம் கழீஇ அன்ப ரோடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே\" (சிபோநுபா 12)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 144"}]}}