{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f7ntynmz/", "data": {"id": "f7ntynmz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f7ntynmz/", "kind": "word", "headword": "சிறுபாணாற்றுப்படை", "romanization": "ciṟupāṇāṟṟuppaṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.772192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்கம் மருவிய பத்துப்பாட்டில் இது ஒன்று இது ஏறுமா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்டது, கடைஏழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்களையும் இதில் காணலாம். 299 அடிகளுடைய பாடல். நல்லியக்கோடன் புலவர்க்கும், பொருநர்க்கும், அந்தணர்க்கும் என்றும் அடையா வாயில் உடையவன்; என்றும் செய்நன்றி அறியும் குணமும், இன்முகம் உடைய பண்பும், அஞ்சினர்க்கு ஆதரவு தரும் இயல்பும், எண்ணியதை ஈடேற்றும் ஆற்றலும் உடையவன்; இன்னோரன்ன குறிப்புக்கள் இதில் உள்ளன. பாணர்களுள் சிறுபாணர் பெரும்பாணர் என இருவர் உளர். அவர்களுள் சிறிய இனிய ஓசையுடைய யாழினைக் கொண்ட பாணனை ஆற்றுப்படுத்திப் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. காலம் கடைச்சங்க காலம். தமிழ் நாட்டுப் பண்பை அறிய இது துணை செய்யும் இலக்கியம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 496"}]}}