{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f67bcswu/", "data": {"id": "f67bcswu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f67bcswu/", "kind": "article", "headword": "அங்கப்பப் பிள்ளை, நா", "romanization": "aṅkappap piḷḷai, nā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.529901+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பெரியார் மாவட்டம் பவானி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர்.", "body_ta": "கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பெரியார் மாவட்டம் பவானி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர். இவர் வாணியம்பாடி சங்கரச் செட்டியார் மகன் முருகப்பச் செட்டியாரின் சிறப்புகளை விளக்கிப் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள இந்நூல் முருகப்ப நவரச சிலேடை எனப் பெயர் பெறும். இது முருகப்பரவச சிலேடை என்றும் வழங்கப்படும். இதன்கண் 9 பாடல்களும் சில கையறுநிலைச் செய்யுட்களும் முருகப்பச் செட்டியாரின் மனைவி கன்னியம்மாள் மீது பிறர் பாடிய பாடல்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன."}}