{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ez6ftw98/", "data": {"id": "ez6ftw98", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ez6ftw98/", "kind": "word", "headword": "சுட்டிச் சுவடுகள்", "romanization": "cuṭṭic cuvaṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:02.400371+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுட்டியை நகர்த்தும்போது திரை யில் நகரும் சுட்டிக் குறி (mouse pointer) நகர்ந்து வந்த பாதையில் தெரிகின்ற சுவடுகள். மடிக் கணினி, கைஏட்டுக் கணினி ஆகியவற்றில் சுட்டிச் சுவடுகள் மிகவும் பயன்படும். ஏனெனில் அவற்றில் இயங்கா அணித்திரைக் காட்சி (passive matrix display) முறை உள்ளது. சுட்டிக் குறி நகர்வது, சுவடுகள் இருந்தால்தான் நன்கு தெரியும். பழைய ஒற்றைநிறத் திரைகளுக்கும் சுவடுகள் இருப்பின் நல்லது. விண்டோஸ் இயக்க முறைமையில் தேவையெனில் சுவடுகள் தெரியும்படி வைத்துக் கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "mouse trails", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 960"}]}}