{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eyvh49kf/", "data": {"id": "eyvh49kf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eyvh49kf/", "kind": "word", "headword": "வகைப்பாட்டியல்", "romanization": "vakaippāṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.737355+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறு பெயர் முறைப்பாட்டியல். வகைப்படுத்தலின் நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் ஆராயுந்துறை. இதன் தந்தை ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ் 1707 - 1778) ஆவார். இது தாவர வகைப்பாட்டியல், விலங்கு வகைப்பாட்டியல் என இரு வகைப்படும். பொதுவாக, ஓர் உயிரியின் உறுப்பமைவு, வேலை, வளர்ச்சி முதலியவற்றிலுள்ள ஒற்றுமை வேற்றுமை அடிப்படையில், அது வகைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு வகைப்படுத்துவதில் # உலகம் (கிங்கடம்) # பெரும்பிரிவு (பைலம்) # வகுப்பு (கிளாஸ்) # வரிசை (ஆர்டர் அல்லது பிரிவு டிவிஷன்) # குடும்பம் (பேமிலி) # பேரினம் (ஜெனஸ்) # சிறப்பினம் (ஸ்பீஷிஸ்) எனப் பல அலகுகள் உண்டு. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சிறப்பினமே. எல்லா முக்கிய உருவியல் பண்புகளிலும் ஒன்றை மற்றொன்று ஒத்தமையும் தனி உயிரிகளைக் கொண்டதே சிறப்பினம். ஓர் உயிரியை இனங் கண்டறிய, அதன் சிறப்பினப் பெயரே மிக இன்றியமையாதது. இன்று இத்துறை பல நிலைகளிலும் நன்கு வளர்ந்துள்ளது", "needs_definition": false, "gloss_en": "taxonomy", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 429"}]}}