{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ey9hdf3g/", "data": {"id": "ey9hdf3g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ey9hdf3g/", "kind": "article", "headword": "நெம்பு கோல்", "romanization": "nempu kōl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.047316+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது ஓர் ஆதாரப்புள்ளியைப் பற்றிச் சுழலும் தன்மையுள்ள கோல் ஆகும்.", "body_ta": "இது ஓர் ஆதாரப்புள்ளியைப் பற்றிச் சுழலும் தன்மையுள்ள கோல் ஆகும். நெம்பு கோல் (lever), விசையை அல்லது இயக்கத்தைப் பெருக்குவதற்குப் பயன் படுகிறது. ஒரு புள்ளியை மையமாக வைத்து இந்தத் தண்டு இயங்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இப்புள்ளி ஆதாரப் புள்ளி (fulcrum) எனப் படும் (படம் 1). உறுதிச் சம நிலையில் இருப்பதற்கு, இரண்டு நிபந்தனைகளில் ஒன்றை, நெம்பு கோல் பயன் படுத்துகிறது. அவை: எந்தவொரு புள்ளியையும் மையமாகக் கொண்டு, செயல் படும் திருப்புத் திறன்களின் குறியியல் கூட்டுத் தொகை சுழியாகும்; ஒரு புள்ளியின் வழியாகப் பல திசைகளிலும் செயல் படும் விசைகளின் குறியியல் கூட்டுத் தொகை சுழியாகும் என்பன.\n\nநெம்புகோலின் ஆதாரப் புள்ளியை மையமாகக் கொண்டு செயல் படும் திருப்புத் திறன்கள் இடஞ்சுழியாக இருப்பின், அவற்றை நேர் குறியாகவும், வலஞ்சுழியாக இருப்பின், அவற்றை எதிர்க் குறியாகவும் கொள்ளப் படும். உராய்வில்லாத நெம்பு கோல் ஒன்றிற்கு\n\nFBb - FAa = 0 FB = FA a/b FB : வெளியீட்டு விசையைக் குறிப்பது FA : உள்ளீட்டு விசையைக் குறிப்பது எனவே எந்திர இலாபம் = FB / FA = a/b\n\nஆதாரத்தானம். எடை செயல் படும் புள்ளி, திறன் செயல் படும் புள்ளி ஆகியவற்றின் நிலைகளுக்கேற்ப நெம்பு கோல் முதல் வகை நெம்பு கோல், இரண்டாம் வகை நெம்பு கோல், மூன்றாம் வகை நெம்பு கோல் என மூன்று வகைப் படுகிறது.\n\nஆதாரத் தானத்திற்கும், திறன் செயல் படும் புள்ளிக்கும், இடைப் பட்ட நேர் குத்துத் தொலைவு திறன் புயம் என்றும், ஆதாரத் தானத்திற்கும், எடை செயற்படும் புள்ளிக்கும் இடைப்பட்ட நேர் குத்துத் தொலைவு எடைப் புயம் என்றும் வழங்கப் படும். நெம்பு கோலின் எந்திர லாபம் என்பது திறன் புயத்திற்கும் எடைப் புயத்திற்கும் உள்ள விகிதமாகும். எந்திர லாபம் = முதல் வகை நெம்பு கோலில் ஆதாரத் தானம் இடையில் இருப்பதால், திறன் புயமும், எடைப் புயமும் ஒன்றுக்கொன்று சமமாகவோ, ஒன்றை விட மற்றொன்று பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம். இவ்வகை நெம்பு கோலில் எந்திர லாபம் ஒன்றாகவோ, ஒன்றை விட அதிகமாகவோ, ஒன்றை விடக் குறைவாகவோ இருக்கும்.\n\nஇரண்டாம் வகை நெம்பு கோலில் எடை செயற்படும் புள்ளி இடையில் இருப்பதால், திறன் புயம் எப்போதும் எடைப் புயத்தை விட மிகுதியாக இருக்கும். இதனால், இவ்வகை நெம்பு கோலில் எந்திர லாபம் எப்போதும் ஒன்றை விட. மிகுந்தே இருக்கும்.\n\nமூன்றாம் வகை நெம்பு கோலில் திறன் செயற்படும் புள்ளி இடையில் இருப்பதால், திறன் புயம் எப்போதும் எடை புயத்தை விடக் குறைவாக இருக்கும். இதனால், இவ்வகை நெம்பு கோலில் எந்திர லாபம் எப்போதும் ஒன்றை விடக் குறைவாகவே இருக்கும். கதவு, பாக்கு வெட்டி, குறடு, தாளில் துளை போடும் கருவி போன்றவை நெம்பு கோலின் தத்துவத்தைப் பயன் படுத்தும் எளிய கருவிகளாகும். எடை போடும் எந்திரங்கள், தராசு போன்றவற்றிலும், பொருள்களின் பண்புகளை ஆராய்ந்து அறியும் எந்திரங்களிலும், சிக்கலான பல வகை நெம்பு கோல் அமைப்புகள் பயன் படுகின்றன. —எம். இளங்கோவன் —ரெ. ஆறுமுகம்"}}