{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ewhdvy8p/", "data": {"id": "ewhdvy8p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ewhdvy8p/", "kind": "article", "headword": "இந்தியப் பொருளாதாரச் சங்கம்", "romanization": "intiyap poruḷātārac caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.295320+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்தியப் பொருளாதாரச் சங்கம் (Indian Economic Association) பொருளாதார அறிவைப் பெருக்கும் நோக்கத்துடன் 1918-ல் நிறுவப்பெற்றது.", "body_ta": "இந்தியப் பொருளாதாரச் சங்கம் (Indian Economic Association) பொருளாதார அறிவைப் பெருக்கும் நோக்கத்துடன் 1918-ல் நிறுவப்பெற்றது. ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதார மாநாடு அடிப்படையில் நடத்துகிறது. மாநாட்டின் நடவடிக்கைகளைச் சங்கத்தின் இதழாகிய 'இந்தியப் பொருளாதார இதழ்' என்பதில் வெளியிடுகிறது. இவ்விதழை அலகாபாத் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து நடத்துகிறது. உறுப்பினர் தொகை ஏறக்குறைய 225 (1952)."}}