{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eu52ur3f/", "data": {"id": "eu52ur3f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eu52ur3f/", "kind": "article", "headword": "அலைட்டிஸ்", "romanization": "alaiṭṭis", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.233123+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அலைட்டிஸ் (Alytes) ஐரோப்பாவிலுள்ள ஒரு", "body_ta": "அலைட்டிஸ் (Alytes) ஐரோப்பாவிலுள்ள ஒரு\n\nசாதித் தேரை. சாதாரணமாகத் தேரை, தவளை முதலியவை முட்டையிட்ட பிறகு அதைப் பாதுகாப்பதில்லை. சில வகைகளில் மட்டும் தங்கள் சந்ததியைக் கவனிக்கும் இயல்பூக்கம் காணப்படுகிறது. அலைட்டிஸ் அத்தகைய ஒரு சாதி. இதில் பெண் இடும் முட்டை பிசின் போன்ற பொருளில் பொதிந்து ஒரு மாலை போல் வரும். அந்த முட்டைமாலையை ஆண் தன் பின் கால்களில் சுற்றிக்கொண்டு, ஈரத்தரையில் குழி தோண்டி அதில் புதைந்து கொள்கிறது. இராக் காலங்களில் வெளியில் வரலாம். நீரில் முட்டைகளை அவ்வப்போது நனைத்தும் வரும். முட்டைகள் கரு வளர்ச்சி முடிந்து லார்வா நிலையடையும் சமயத்தில் வெளியே வந்து குளம் முதலிய நீர் நிலையில் சேரும். அங்கு அந்த லார்வாக்கள் முட்டையைச் சூழ்ந்திருக்கும் கோழையைவிட்டு நீங்கி, நீரில் நீந்தி வளர்ந்து உருமாறி அலைட்டிஸ் ஆகும். எல். எஸ். ரா.]]"}}