{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/et36sc5w/", "data": {"id": "et36sc5w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/et36sc5w/", "kind": "article", "headword": "செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள்", "romanization": "ceytit toṭarpuc ceyaṟkaik kōḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:00.211576+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நெடுந் தொலைவு அல்லது கடல் கடந்த செய்தித் தொடர்புகளுக்குப் பயன்படக் கூடிய புவியைச் சுற்றும் ஒரு வகை ஊர்தியே செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும்.", "body_ta": "நெடுந் தொலைவு அல்லது கடல் கடந்த செய்தித் தொடர்புகளுக்குப் பயன்படக் கூடிய புவியைச் சுற்றும் ஒரு வகை ஊர்தியே செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். இது ஒரு விண்வெளிக் கருவியாகும். நுண் உணர் சட்டமும், பரப்பியும் செயற்கைக் கோளில் அமைக்கப்பட்டிருக்கும். அயன மண்டலத்தைக் குறிப்பலைகள் தாண்ட வேண்டுமானால், நுண் அலைவெண்கள் வேண்டும். அயன மண்டலத்தை எளிய ரேடியோ அலை வெண்கள் கொண்ட சைகைகள் தாண்டா. மேலும் அகல் பட்டைகள் கொண்ட குறிப்பலைகளைக் கையாள நுண்ணலைகள் தேவைப் படுகின்றன. செயற்கைக் கோள்களில் உள்ள விண்வெளிக் கலத்தில் மிகு பயன் கொண்ட உணர் சட்டங்கள் பயன்படுகின்றன.\n\n1965 ஆம் ஆண்டு முதல் வணிக நோக்குடன் விண்வெளிக் கலம் பணி புரியத் தெடங்கியது. 1965இலிருந்து கூடுதல் எண்ணிக்கையில் தொடர்பியல் செயற்கைக் கோள்கள் ஏவப் பட்டுள்ளன. இவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்திகளை அனுப்பவும், தொலைக் காட்சிச் சைகைகளை உயர் பரப்பளவில் பரப்பவும், கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் தேவையான வழி காட்டவும் பயன்படுகின்றன.\n\nசெயற்கைக் கோள்களை ஒரு நாட்டிற்கே பயன்படுமாறும், இரண்டு மூன்று நாடுகளுக்குப் பொதுவானதாகவும், உலகிற்கே பொதுவானதாகவும் பயன் படுத்தலாம். சான்றாக, கனடியன் டெலிசேட் இயக்கம் என்பது கனடாவுக்கு மட்டும் உரியது. பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி சிம்பனி இயக்கம் இரண்டு மூன்று நாடுகளுக்கு உரியது. இன்ட்டல் சாட் என்பது உலகிற்குப் பொதுவாகும். அனைத்துச் செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள்களின் (communication satellite) பணிகளையும் தொடர்பு படுத்த, உலகத் தொலைத் தொடர்பியல் சங்கம் பயன் படுகிறது. ஜெனிவாவிலிருந்து இவ்வியக்கம் பணி புரிகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> விண்வெளிக் கோள்கள் செயல் தன்மை கொண்டவை. குறிப்பலைகளை வாங்கிய பின், மீண்டும் அனுப்புகின்றன. செயல் தன்மையற்ற கோள்கள் பொதுவாகச் சைகைகளை எதிரொலித்து அனுப்பும் தன்மை கொண்டவை. செயல் தன்மை கொண்ட கோள்களில் திசை கொண்ட மிகவும் கூரிய உணர் சட்டங்களும் மிகவும் சிக்கலான மின் சுற்றுக் கொண்டவையாக இருக்கும். செயற்கைக் கோள்களை ஓரிடத்-\n\nதில் நிலையாகக் கட்டுப்படுத்த எந்திர வடிவமைப்புகள் தேவைப்படுகின்றன. செயற்கைக் கோள்களுக்கு வேண்டிய மின்னாற்றல், சூரிய ஒளியால் இயங்கும் மின் கலங்கள் மூலம் பெறப்படுகின்றது. நிக்கல் கேட்மியம் மின்கலங்கள், சூரிய ஒளியில்லாத காலங்களில், மின்னாற்றலைத் தேக்கிப் பயன்படுத்துகின்றன. செயற்கைக் கோள்கள் புவியிலிருந்து 600 ஆயிரம் மீட்டர் தொலைவில் உள்ளன. செயற்கைக் கோள்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் செலுத்தப் படுகின்றன. பாதைகள் சாய்ந்த நீள் வட்டம், துருவ வட்டம், புவிக்கு நிலையானவை என்பன ஒவ்வொரு வகையான பாதையும், ஒவ்வொரு பணிக்கு உதவும். —க. அர. பழனிச்சாமி நூலோதி. W.M. Smart, Text Book on Spherical Astronomy, Sixth Edition, Vikas Publishing House Pvt Ltd, New Delhi, 1979."}}