{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/es2cv2m7/", "data": {"id": "es2cv2m7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/es2cv2m7/", "kind": "article", "headword": "இலம்பாடிகள்", "romanization": "ilampāṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.076828+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கருநாடகம் முதலிய மாநிலங்களில் வாழும் நாடோடிப் பழங்குடிச் சமூகத்தினராவர்.", "body_ta": "ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கருநாடகம் முதலிய மாநிலங்களில் வாழும் நாடோடிப் பழங்குடிச் சமூகத்தினராவர். இலம்பாடிகள் (Lambadis) தென்னிந்தியப் படையெடுப்பின் போது முகமதியர்களுக்குப் போர்க் கருவிகளை வட இந்தியாவிலிருந்து எருதுகளின் மீது சுமந்து வந்தவர்களாவர். முகமதியரின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தெலுங்கானாப் பகுதியில் குடியமர்ந்து உப்பு விற்கும் தொழிலை மேற்கொண்டனர். இதனால் ‘இலமானா’ அல்லது ‘இலம்பாடி’ (இலமானா - உப்பு) என இவர்கள் பெயர் பெற்றனர். இதன் பின்னர் இலம்பாடிகள் உப்பு வணிகத்தை விடுத்து, ஆயர் நாடோடி (Pastoral nomad) வாழ்க்கையை மேற்கொண்டனர். இவ்வகையிலான வாழ்க்கைப் பொருளாதாரத்தில் பசு மந்தைகளைக் கொண்டிருந்ததால், இவர்கள் ‘சுகாலி’ (சுக்வாலா-பசு மந்தை உடையவன்) எனக் குறிக்கப்பெற்றனர். இலம்பாடிகளுள் ஒரு பிரிவினர் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்பு உணவுப் பொருள் வணிகம் செய்து வாழ்ந்தனர். இதனால் இவர்கள் ‘பஞ்சாரா’ (வணிகர்) எனப் பெயர் பெற்றனர்.\n\nஇலம்பாடிகள் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 20,000க்கு மேற்பட்ட இவ்வின மக்கள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் முகமதியரின் படையெடுப்பின்போது ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் முதலிய மாநிலங்களுக்கு ஓடிவந்தனர் என்று, இவர்களைப் பற்றிய இனக்குழு வரலாறு (Ethnohistory) கூறுகிறது. பிறகு நாளடைவில் தமிழகத்திலும் இலம்பாடிகள் பரவினர். மகாராட்டிரத்திலும் ஆந்திராவிலும் இவர்கள் பழங்குடியினராகவும், கருநாடகத்-\n\nஇலம்பாடிப் பெண்\n\nதில் ஆதிதிராவிட வகுப்பினராகவும், தமிழ்நாட்டில் சிறிது காலத்திற்கு முன்வரை பழங்குடியினராகவும் கருதப்பட்டனர். தமிழகத்தில் இப்போது இலம்பாடிகள் பின்தங்கிய வகுப்பினராகக் குறிக்கப்பட்டுள்ளார்கள்.\n\nதொடக்க காலத்தில் கடற்கரையிலிருந்து உப்பினையும் உள்நாட்டிலிருந்து தானியங்களையும் எருதுமேல் ஏற்றி கொண்டு சென்று வணிகம் செய்தனர். இதன் பின்னர்ப் பெரும் புல்வெளிகளில் வாழிடத்தையமைத்து, கால்நடைகளைப் பெருக்கி வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில் உழவுத் தொழிலில் ஈடுபட்டு நிரந்தரமான வாழ்க்கையை மேற்கொண்டனர். இலம்பாடிகளுள் ஒரு பிரிவினர் குற்ற வகுப்பினராகக் கருதப்படுகின்றனர்.\n\nஇலம்பாடி முதியவர்\n\nஇலம்பாடிகள் நல்ல உயரமும், உடல் வலிமையும், சிவந்த நிறமும், அழகிய முகவெட்டும், நீண்ட மூக்கையும் உடையவர்களாய் நார்டிக்கு (Nordic) இனத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர்.\n\nஇவர்களின் ஆடைகள் சிறந்த மரபினைக் கொண்டவை. மகளிரின் வண்ணப் பாவாடைகள், தலை மேலாடைகள் ஆகியவை தனித்தன்மை உடையனவாய் ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் ஒரே தன்மையாக உள்ளன. வயது முதிர்ந்த இலம்பாடியப் பெண்கள் தங்களின் அழகிய மரபு உடைகளைச் சிவப்பு, பச்சை நிறத் துண்டுகளைக் கொண்டு கையினாலேயே நகைக்கற்கள், மணிகள், சோழிகள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவற்றை இணைத்து வண்ண வண்ண நூல்களில் கோத்துத் தைக்கின்றனர். தமிழ்நாட்டில் வடாற்காடு மாவட்டச் செங்கம் பகுதியிலும் தருமபுரி மாவட்டத் தேன்கனிக் கோட்டைப் பகுதியிலும் உள்ள இலம்பாடிப் பெண்கள் மற்றக் கிராமியப் பெண்களைப் போன்றே மேற்சட்டையையும் சேலையையும் விரும்பி அணிகின்றனர். ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலுள்ள இலம்பாடி ஆடவர்களும் கிராமிய ஆடவர்களைப் போன்றே சட்டையையும் அணிகின்றனர்.\n\nஇவர்கள் இலம்பாடி மொழியைப் பேசி வருகின்றனர். இது ஒரு கிளை மொழியாகும். இந்தியச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் இக்கிளை மொழியில் கலந்துள்ளன. தெலுங்குச் சொற்கள் மிகுதியாகக் காணப்படவில்லை. இலம்பாடிகள் வாழும் மாநிலத்திலும் இக்கிளைமொழி ஒரே தன்மையாகப் பேசப்படுகிறது. தமிழ்நாட்டு இலம்பாடிக் கிளை மொழியில் உருது, தெலுங்கு, தமிழ், ஆங்கிலச் சொற்கள் கலந்து காணப்படுகின்றன. ஆந்திரம், கருநாடகம், தமிழ்நாடு ஆகியவற்றில் வாழ்ந்து வரும் இலம்பாடிகள் காலப்போக்கில் அந்தந்த மக்களுடன் பழகுகின்றமையால் தெலுங்கு, கன்னடம் தமிழ் ஆகிய மொழிகளையும் தெளிவாகப் பேசுகின்றனர்.\n\nஇலம்பாடிகள் ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர், பெல்லாரி, சித்தூர், கர்நூல், குண்டூர், கிருட்டிணா, கோதாவரி ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றனர். தமிழ்நாட்டில் வடாற்காடு மாவட்டச் செங்கம் பகுதியிலும், தருமபுரி மாவட்டத் தேன்கனிக்கோட்டைப் பகுதியினும் மிருதியாகக் காணப்படுகின்றனர். இவர்களின் வாழிடம், கிரா-\n\nஇலம்பாடிகள் மத்திலிருந்து சற்றுத் தூரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் அமைந்துள்ள வட்டவடிவமான குடிசை வீடுகள் கொண்டதாகும். இது ‘தண்டம்’ எனக் கூறப்படும்.\n\nகர்நூல் வட்ட இலம்பாடிகள் தங்கள் கால்நடை வளர்ப்பில் மிக்க கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் அண்டை மக்களுடன் உண்மையுள்ளவர்களாகவும் அன்புடையவர்களாகவும் வாழ்கின்றனர். தமிழ் நாட்டு இலம்பாடிகளுள் ஒரு பிரிவினர் வளமாகவும் வாழ்ந்து வருகின்றனர்; சிலர் ஏழ்மையிலும் உள்ளனர். வேளாண்மை இவர்களின் முதன்மையான தொழிலாகும். நெல், சாமை, கேழ்வரகு, கம்பு, சோளம், நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். விறகு வெட்டி விற்றல், வேட்டையாடுதல் ஆகியவை இவர்களுடைய துணைத்தொழில்களாகும். சிலர் நிலக்கிழாரிடம் ஆண்டிற்கு ஓராயிரம், இரண்டாயிரம் முன்பணம் வாங்கிக் கொண்டு பண்ணையாட்களாக வேலை செய்கின்றனர்.\n\nசமயச் சார்பில் இருவகை இலம்பாடிகள் உளர். செங்கம் வட்டத்தில் (வடஆர்க்காடு மாவட்டம்) வாழும் ஒருவகையினர் தம்பூரு எனப்படும் முகமதியராவர். இவர்கள் முகமதியரின் வழிபாட்டு முறையினைக் கொண்டுள்ளனர். மற்ற வகையினர் இந்து இலம்பாடிகளாவர். இவர்கள் இந்துத் தெய்வங்களை வழிபடுகின்றனர்.\n\nதமிழ்நாட்டு இலம்பாடிகளின் குடும்பம் இருவகைப்படும். ஒன்று ‘மீட்டு’ என்றும், மற்றது ‘புக்கையா’ என்றும் சொல்லப்படும். மீட்டு வகையைச் சேர்ந்த இலம்பாடிகள் இரத்த உறவுடையவர்கள். இவர்களைப் போன்றே புக்கையா என்னும் பிரிவினரும் இரத்த உறவுடையவர்கள். ஆகையால், மீட்டுப் பிரிவினரும் புக்கையாப் பிரிவினரும் தத்தம் குழுவுக்குள் பெண் கொள்ளுதல் இலர், வேற்றுக் குழுவிலேயே மணவுறவு கொள்வர்.\n\nதிருமண முறைகளில் மற்றப் பழங்குடியினரைப் போன்றே ஒருதார மணம், பலதார மணம், விதவை மணம், காதல் மணம், திருமண விடுதலை, மறுமணம் ஆகிய திருமண முறைகள் இவர்களிடமுண்டு. ஆனால், மணமகன் வீட்டார் மணமகளுக்குரிய பரிசப் பணமாகச் சிறு தொகையைக் கொடுக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது, சீதனமாகப் பெற்ற எருது மீது மணப்பெண்ணை உட்காரவைத்துப் பாட்டுப்பாடி அழைத்துச் செல்வது இவர்கள் மரபு. திருமணமான இலம்பாடிப் பெண் திருமண அடையாளமாக வளையல்களை மிகுதியாக அணிந்திருப்பாள். மேலும், காதில் ஒரு வளையமும் சங்கும் அணிவாள்; இது தாலி போன்றதாகும். இக்காலத்தில் பொட்டுத்தாலியும் கட்டுகின்றனர். திருமணமாகாத வயதுவந்த பெண்கள் யாவரும் முழங்கையில் கைவளையல்களை அணிவர். இவர்கள் தயாரிக்கும் வண்ணக் கைக்குட்டை, சிவப்புக் கைவளையல்கள் வேலைப்பாடு நிறைந்தவை. இவர்கள் திருமணத்தில் பல சடங்குகள் இடம்பெறுகின்றன. இக்கால இலம்பாடி மாணவர்கள் கல்வி பெற்றுப் பல்வேறு அரசுத் துறைகளில் பணி புரிகின்றனர். நே.தே.\n\nஇலம்பாடி குடியிருப்பு"}}