{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eqzmg9xe/", "data": {"id": "eqzmg9xe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eqzmg9xe/", "kind": "article", "headword": "செர்ட்", "romanization": "cerṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:00.566880+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது குவார்ட்ஸ் என்னும் கனிமத்தின் ஒரு வகையாகும்.", "body_ta": "இது குவார்ட்ஸ் என்னும் கனிமத்தின் ஒரு வகையாகும். சால்சிடொனி, நுண் படிகக் குவார்ட்ஸ் முதலிய அமைப்பில் காணப்படும் அடர் நுண் படிகச் சிலிக்காப் பாறை செர்ட் (chert) எனப்படும். தற்போது, இதில் குவார்ட்ஸ் மிகுந்தளவும், சிலிக்கா அல்லது ஓபல் தூள்கள் இழைகளுக்கிடையே குறைந்தளவும் உள்ளமை அறியப் பட்டுள்ளது. மாசுகளைப் பொறுத்து, செர்ட்டின் நிறம் பலவாறாக வேறுபடுகிறது. செர்ட் பெரும்பாலும், வெளிர் நிறங்களில் காணப் படுகிறது. சங்கு முறிவிலிருந்து (conchoid fracture) சிராய் போன்ற முறிவு (splintery) வரை காணப்படுகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஃபிளிண்ட் என்னும் சொல், கலைப் பொருள்களைக் (artefact) குறிக்கப் பயன்பட்டாலும், செர்ட் என்னும் சொல்லே பாறைகளைக் குறிக்கப் பயன் படுகிறது. சைலெக்சைட், ஹார்ன்ஸ்டோன், ஃப்தானைட் (phthanite) முதலியவை செர்ட்டின் ஏனைய பெயர்களாகும். போர்செலினைட், அடர்ந்த கடினமான சிலிக்காப் பாறையாகும். இது களிமண் அல்லது சுண்ணப் பொருள்களாலான (argillaceous or calcareous) செர்ட்டாகும். நுண் படிகக் குவார்ட்ஸ் மிகுந்துள்ள நோவாகுலைட் ஒரு படுகைச் செர்ட்டாகும்.\n\nஉட்கூறுகள். கால மாற்றத்தைப் பொறுத்து, செர்ட்டின் உட்கூறுகள் மாறுபடுகின்றன.\n\nநிலத்திலும், ஆழ்கடலில் அகழ்ந்தெடுக்கப்பட்ட டெர்ஷியரி செர்ட்டுகளிலும் ஓபல் காணப் படுகிறது. ஆனால், பழமையான படுகைகளில் காணப்படுவதில்லை. பழமையான செர்ட்டுகளில், நுண் படிகக் குவார்ட்சும், சால்சிடொனியும் உள்ளன. கால்சைட், டோலமைட், களிமண் கனிமங்கள், தேய்ந்த குவார்ட்ஸ் முதலியவை செர்ட்டின் சிலிக்கா அற்ற உட்கூறுகளாகும்.\n\nகிடைக்குமிடம். செர்ட் இரண்டு அமைப்பாகக் காணப் படுகிறது. படுகைகளாகவும், சுண்ணப் பாறை, டோலமைட் முதலியவற்றில் முடிச்சுகளாகவும் காணப்படுகிறது (படம் 1, 2). முடிச்சுகள், படுகைக்கு இணையாகத் தட்டையாகப் பல அளவுகளில் காணப் படுகின்றன. முடிச்சுகளில், தொல்லுயிர்ப் படிவுகள் பொதுவாகக் காணப் படுகின்றன. படுகைச் செர்ட்டுகள் 3மீ. தடிமன் வரை காணப் படுகின்றன. இவை அடுக்குகளாகவும் உள்ளன. இவ்வடுக்குகள், சிடரைட், ஹேமடைட், களிப் பாறை (shale) முதலிய படிவுகளால் பிரிக்கப் பட்டுள்ளன. முன்கேம்பிரியக் காலப் படுகைச் செர்ட்டுகளில், இரும்புத் தாதுப் படிவுகள் மிகுதியும் இணைந்து காணப் படுகின்றன. பழமையான முன்கேம்பிரியச் செர்ட்டுகளில் புவியிலுள்ள பழமையான உயிரிகளின் படிவங்கள் காணப் படுகின்றன. சில சொட்டுகள் முட்டை வடிவத்தில் (oolitic) உள்ளன. இவை சுண்ண மணிக் கற்களுக்குப் பதிலாக (calcareous oolite) உருவாகியுள்ளன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. செர்ட்டில் பொதுவாகக் கார்போனேட் உட்கூறுகள் காணப் படுகின்றன.\n\nஆழ்கடலில் காணப்படும் செர்ட்டுகளில் மிகுந்த கவனம் செலுத்தப் படுகிறது. ஏனெனில், கல்லியம் சார்ந்த டெர்ஷியரி கால செர்ட்டுகள், ஆழ் கடலில் பரவலாகக் காணப் படுகின்றன. தற்போது, ஓஃப்பியோலைட் எனப் படும் பச்சைக் கல் வகை, ஆழ் கடலில் காணப்படும் செர்ட் மற்றும் களிமண்ணின் படிவுகள் என அறியப் பட்டுள்ளது.\n\nதோன்றுமிடம். செர்ட்டின் தோற்றத்தைப் பற்றி இரண்டு கோட்பாடுகள் கூறப் பட்டுள்ளன. அவை, மூலச் சுண்ணப் பொருள்களுக்குப் பதிலீடாக காணப் படுதல், சுற்றுச் சூழல் படிவு நீரிலிருந்து, சிலிக்கா வெளியேற்றம் முதலியவையாகும். —இரா, சரசவாணி நூலோதி. P. Ramdohr, The ore Minerals and their Intergrowths, Pergaman Press, Oxford, 1969."}}