{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ep8m2ckd/", "data": {"id": "ep8m2ckd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ep8m2ckd/", "kind": "article", "headword": "பக்க அலைப் பட்டை", "romanization": "pakka alaip paṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.511432+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஓர் ஊர்தி அலையின் அதிர்வெண்ணுக்கும் மேலான அல்லது குறைவான அதிர்வெண்களை உடைய அலைகளைக் கொண்ட பட்டை, பக்க அலைப் பட்டை (Side band) எனப் படுகிறது.", "body_ta": "ஓர் ஊர்தி அலையின் அதிர்வெண்ணுக்கும் மேலான அல்லது குறைவான அதிர்வெண்களை உடைய அலைகளைக் கொண்ட பட்டை, பக்க அலைப் பட்டை (Side band) எனப் படுகிறது. அப்பட்டை, ஊர்தி அலையை ஒட்டி அமையும், பண்பேற்றச் செயல்பாட்டில் உண்டாக்கப் படும் அலையின் அதிர்வெண் ஆக்கக் கூறுகள் பக்க அலைப் பட்டையில் இடம் பெறும். ஊர்தி அலை மட்டுமின்றி, ஒரு வீச்சுப் பண்பேற்றப் பட்ட சைன் கோட்டு வடிவ ஊர்தி அலையின் அனைத்து ஆக்கக் கூறுககளையும் மொத்தமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளும் போது, அவை ஊர்தி அலையின் இரு புறங்களிலும் ஆடிப்பம்பச் சமச் சீர்மையுள்ள இரண்டு பக்கப் பட்டைகளாக அமையும். அவற்றில், பண்பேற்றுகிற அலையின் அனைத்து ஆக்கக் கூற்று அதிர்வெண்களும் இடம் பெறும். ஊர்தி அலையின் மேல் பக்கமிருப்பது மேல்ப் பக்கப் பட்டை எனவும், கீழ்ப் பக்கமிருப்பது கீழ்ப் பக்கப் பட்டை எனவும் குறிப்பிடப்படும். —கே. என். ராமச்சந்திரன்"}}