{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ekv8a8dz/", "data": {"id": "ekv8a8dz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ekv8a8dz/", "kind": "word", "headword": "ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய்", "romanization": "āspālṭṭam vaṇṇa merukeṇṇey", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.990350+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் மிகச் சிறந்த தரம் வாய்ந்தது 'கில்சோனைட்' எனப்படும். இது கருப்பு நிறமுடையது; விலை சற்று அதிகம். இது விரைவாகக் காய வேண்டியதாக இருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஜப்பானிய மெருகு போன்ற விளைவினைக் கொடுக்கும். சாதாரண ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய் முக்கியமாக வெப்பத்தையும் அமிலத் தன்மையையும் எதிர்க்கும் இயல்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மரம் போன்ற ஈர்க்கும் பொருள் மீது இதனைப் பூசினால் இதன் நிறம் கருப்பாகும். ஆனால், உலோகப் பரப்பின் மீது பூசும் போது அதன் நிறம் பழுப்பாக இருக்கும். மின்கலங்கள் தயாரிப்பதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "alphaltum varnish", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}