{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ekee36cb/", "data": {"id": "ekee36cb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ekee36cb/", "kind": "article", "headword": "செபச் சுரப்பி", "romanization": "cepac curappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.970669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது பாலூட்டிகளில் புறப்படையிலிருந்து தோன்றும் ஒரு வகைத் தோல் சுரப்பி.", "body_ta": "இது பாலூட்டிகளில் புறப்படையிலிருந்து தோன்றும் ஒரு வகைத் தோல் சுரப்பி. தோலுக்கடியிலுள்ள தசைப் பகுதியில் அமைந்திருக்கும் இது, ஓர் எண்ணெய்ச் சுரப்பி. இச்சுரப்பி மயிர்க் காலின் அடிப் பகுதியிலுள்ள சுரப்பிச் செல்களால் ஆனது. சுரப்பிச் செல்கள் இணைந்த பல சிறு பைகளாக அமைந் திருக்கும். இவற்றின் வடிகுழல்கள் மயிர்க் குலையின் மேற்பகுதியில் திறக்கின்றன. மயிர்க் குலைகளின் கழுத்து வழியாகச் செல்லும் மயிர்த் தண்டுகள் மீது செபம் (sebum) என்னும் நீர்மத்தைச் செபச் சுரப்பி (sebaceous gland) சுரக்கிறது. மயிர்க் குலைகளின் கீழ்ப் பரப்பில், தோலின் உள்ளே செபம் காணப்படும். மயிரின் நெகிழ் தன்மையைப் பாதுகாக்க உதவும் செபம், எண்ணெய் போன்ற பொருளாகும். மயிர்க் குலையின் வாயைச் சுற்றியுள்ள புறத் தோல் பரப்பின் மீது செபம் உள்ளது. செபத்திற்கும், வியர்வைக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு பிடிக்க, ஒரு கண்ணாடித் தட்டில் செபத்தையும், வியர்வையையும் ஒட்ட வைத்தால், வியர்வை விரைவிலேயே உலர்ந்து விடுகிறது. செபம் உலர்வதில்லை.\n\nசெபச் சுரப்பியின் நாளம் அடைபட்டால், நுண்ணுயிரித் தாக்கம் நிகழலாம். பெரும்பாலும், தலையின் மேற்பகுதியிலேயே தோன்றும் செப நீர்ப் பை (sabaceous cyst) தீங்கற்றது. அளவில், பெரியதாக இருந்தால், அறுவை மருத்துவம் மூலம் அகற்றி விடலாம். —மு. கி. பழனியப்பன் நூலோதி. Richard S. Snell, Clinical Anatomy for Medical Students, Third Edition, Little Brown & Co, Boston, 1906.\n\nசெபச் சுரப்பிகள் (sebaceous glands) சில பாலூட்டிகளில் மல வாயின் பக்கத்திலுள்ள மயிரற்ற பெரினியல் குழிகளில், பெரினியல் சுரப்பிகளாக அமைந்திருக்கும். இவற்றின் சுரப்பு, ஒரு குறிப்பிட்ட நாற்றத்தைத் தருகிறது. இது பாலின ஈர்ப்புக்குப் பயன் படுவதாகக் கருதப்படுகிறது (எ-டு. முயல்).\n\nசெபச் சுரப்பிகள் கண் இரைப்பியின் உட்புற அருகுகளில் அமைந்து, கண் இமையையும், விழிக் கோளத்தையும், தம் சுரப்பு எண்ணெயால் பதனாக வைத்திருக்கப் பயன்படும். இவை, சுரப்பிச் செல்களில் பல நுண்ணறைகளையும், அதன் குழல்களையும் கொண்டவை. இவற்றுக்கு மெய்போமியன் சுரப்பிகள் என்று பெயர். —எஸ். கே. வள்ளி"}}