{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ekdwfyh3/", "data": {"id": "ekdwfyh3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ekdwfyh3/", "kind": "word", "headword": "அகநானூறு", "romanization": "akanāṉūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.196987+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்க இலக்கிய நூல்கள் எட்டுத்தொகை நூற்களுள் இதுவும் ஒன்று. இன்பத்தைப் பற்றிக் கூறும் 100 அகவற்பாக்களையும், கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றையும் கொண்டது. இப்பாடல்கள் ஒரு புலவரால் பாடப்பட்டவை அல்ல. 145 புலவர்களால் அவ்வப்போது பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்ட பாடல்களின் தொகுதியே இந்நூலாகும்.பெண்பாற்புலவர்கள் பாடிய பாடல்களும் இதில் உண்டு. இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு. இதனைத் தொகுக்குமாறு வேண்டியவர் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியராவர். தொகுத்துத் தந்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார். இந்நூல் மூன்று பிரிவுகளையுடையது. அவை, களிற்றுயானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்பன. செய்யுட்களில் அமைந்துள்ள நடையைக் கருதி இவ்வாறு பாகுபடுத்தினர். ஒன்று முதல் நூற்றிருபது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 453"}]}}