{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eg7tk8ax/", "data": {"id": "eg7tk8ax", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eg7tk8ax/", "kind": "article", "headword": "இலிசுட்டு", "romanization": "ilicuṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.930209+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அங்கேரி நாட்டைச் சேர்ந்த இயலிசைப் புலவராவார்.", "body_ta": "அங்கேரி நாட்டைச் சேர்ந்த இயலிசைப் புலவராவார். இவர் குழந்தைப் பருவத்திலேயே இசையில் சிறந்து விளங்கினார். இவர் செருமனி, ஆசுத்திரியா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை வல்லுநர்களிடம் இசை பயின்றார். இறுதியில் இலிசுட்டு (Liszt) சுவிட்சர்லாந்தில் தங்கினார். இவர் செருமனி நாட்டின் இசைக் கழகத்திற்குச் சில காலம் தலைவராக இருந்தார். அக்காலத்தில் புகழ்பெற்ற இசை வல்லுநர்கள் இவருடைய மாணாக்கர்களாக இருந்தனர். இவர் ஐரோப்பாவெங்கும் சுற்றி இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். இவர் பியானோ இசைப்பதில் பெரும் புகழ் பெற்றார். இவர் காலத்திற்குப் பின்னர் ஓர் இசைக் கலைஞர் மட்டும் தனித்துப் பியானோ இசை நிகழ்ச்சி நடத்தும் முறை ஏற்பட்டது. இவர்தம் பியானோ இசைப் பாடல்களுள் ‘ஆழ்நிலை ஆய்வுகள்’ (Transcendental Studies) ‘அங்கேரியன் நாட்டுப்பாடங்கள்’ (Hungarian Rhapsodies) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றைத் தவிர இலிசுட்டு பல இசைக்கருவிக் குழுப் பாடல்களையும் இசைப்பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். இறுதிக்காலத்தில் இவர் இயற்றிய இசைப் பாடல் ஒத்திசை முறையில் அமைந்திருந்தன."}}