{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ea7rrxu5/", "data": {"id": "ea7rrxu5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ea7rrxu5/", "kind": "word", "headword": "மூத்த திருப்பதிகம்", "romanization": "mūtta tiruppatikam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.270696+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராம் திருமுறையில் இரண்டாவது நூலாகத் திகழும் பெருமையுடையது. தேவாரப் பதிகங்களே திருப்பதிகம் என்னும் சிறப்புக்குரியனவாக இருத்தலின், அத்தேவாரப் பதிகங்களை நோக்க இப்பதிகம் முன்னர்த் தோன்றினமை கருதி, இதற்கு மூத்த திருப்பதிகம் என்ற பெயரை ஈந்தனர். இது திருவாலங்காட்டின் இறைவர் மீது காரைக்கால் அம்மையார் பாடிய திருப்பதிகமாகும். இதன் காலம் அப்பர், சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவருக்கும் முற்பட்ட காலம். ஆகவே,கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 545"}]}}