{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e82u4bgs/", "data": {"id": "e82u4bgs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e82u4bgs/", "kind": "word", "headword": "செருகு வரிசை யாக்கம்", "romanization": "ceruku varicai yākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.028360+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்வேறு வரிசையாக்க முறைகளுள் ஒன்று. வரிசையாக்க வேண்டிய ஒரேயொரு உறுப்பினை முதலில் எடுத்துக்கொண்டு இந்த வரிசையாக்க முறை தொடங்கப்படுகிறது. இரண்டாவது உறுப்பினை எடுத்து, முதல் உறுப்பினைவிடப் பெரிதா, சிறிதா எனப் பார்த்து முன்னாலோ அல்லது பின்னாலோ இணைக்க வேண்டும். அடுத்த உறுப்பினை எடுத்து, வரிசையாக்கப் பட்டியலில் பொருத்தமான இடத் தில் செருக வேண்டும். இவ்வாறு ஒரு நேரத்தில் ஒர் உறுப்பினை மட்டும் எடுத்துக் கொண்டு பட்டியலில் அதற்குரிய இடத்தில் செருகி எவ்வளவு பெரிய வரிசையாக்கப் பட்டியலையும் உருவாக்க முடியும். குவித்து வைக்கப்பட்டுள்ள சீட்டுக் கட்டில் ஒவ்வொரு சீட்டாக எடுத்துக் கையில் வரிசையாக அடுக்கும் முறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். கோவைகளை (Arrays) பொறுத்தமட்டில் இம்முறை திறனற்றது. ஏனெனில், ஒவ்வொரு உறுப்பினைச் செருகும்போதும் பிற உறுப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தொடுப்புப் பட்டியல்களுக்கு (Linked Lists) இந்த முறை மிகவும் ஏற்றது", "needs_definition": false, "gloss_en": "insertion sort", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 238"}]}}