{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e3wndn2g/", "data": {"id": "e3wndn2g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e3wndn2g/", "kind": "article", "headword": "நொடிப்பு", "romanization": "noṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.169936+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பம்பரம் போன்ற ஒரு தற்சுழற்சியுள்ள திண்மப் பொருள், ஒரு செங்குத்து அச்சைப் பற்றித் கொண்டு, அச்சுச் சுழற்சியை நிகழ்த்தும் போது, அது விரைந்து மேலும் கீழுமாக நகரும் நிகழ்ச்சியை எந்திரவியலில் நொடிப்பு (nutation) என்பர்.", "body_ta": "பம்பரம் போன்ற ஒரு தற்சுழற்சியுள்ள திண்மப் பொருள், ஒரு செங்குத்து அச்சைப் பற்றித் கொண்டு, அச்சுச் சுழற்சியை நிகழ்த்தும் போது, அது விரைந்து மேலும் கீழுமாக நகரும் நிகழ்ச்சியை எந்திரவியலில் நொடிப்பு (nutation) என்பர்.\n\nசுழலும் பம்பரத்தின் இயக்கத்தை ஆராய்ந்தால், அதன் தற்சுழற்சித் (spin) திசை வேகம் மிகக் குறைவாக இருக்கும் போது, அச்சுச் சுழற்சியும் (precession), நொடிப்பும் காணப் படுவதை உணரலாம். படம் (அ) அச்சுச் சுழற்சியுடன் கூடிய சமச் சீர்வுள்ள பம்பரத்தின் இயக்கத்தைக் காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகத்திலேயே சுழலும் பம்பரத்தின் அச்சும் நகருமானால், அச்சு இயங்கும் பாதையைப் படம் (ஆ) காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகத்தின் திசைக்கு எதிர்த் திசையில் சுழலும் பம்பரத்தின் அச்சு நகருமானால், அச்சு இயங்கும் பாதையைப் படம் (இ) காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகம் சுழியெனில், பம்பரத்தின் அச்சு நகரும் பாதையைப் படம் (ஈ) காட்டுகிறது. படங்கள் (ஆ) (இ) (ஈ) களில் (θ₂ - θ₁) என்னும் கோண அளவு நொடிப்பின் அளவைக் குறிக்கிறது.\n\nஉயர்ந்த தற்சுழற்சித் திசைவேகம் கொண்ட ஒரு பம்பரத்தின் அச்சின் நொடிப்புக்கான கோண அதிர்வெண் \\omega_n = \\frac {Iz}{Ix} s Iz , Ix என்பன முறையே Z, X அச்சுகளில் நிலைமத் திருப்புத் திறன்களாகும். S என்பது தற்சுழற்சி கோணத் திசை வேகம். மேலும், அச்சுச் சுழற்சி அதிர்வெண் Wp என்பது சீரானது அன்று. நேரத்திற்கு ஏற்றபடி, நொடிப்பு அதிர்வெண் வீதத்தில் அது மாறுகிறது. Wpக்கும் Wnக்கும் உள்ள தொடர்பு வருமாறு: \\omega_p = \\frac {W_i}{Izs} (1 - cos \\omega n t) W என்பது பம்பரத்தின் எடை; । என்பது அதன் புவியீர்ப்பு மையத்திற்கும், அது தரையைத் தொடும் கூர் முனைக்கும் உள்ள தொலைவு; சராசரி அச்சுச் சுழற்சி அதிர்வெண் (Wp) சராசரி = சமன்பாடு (1)இலிருந்து தற்சுழற்சி அதிர்வெண் S கூடும் போது, நொடிப்பு அதிர்வெண்ணும் கூடுகிறது எனத் தெரிகிறது. அப்போது நொடிப்பு இடப் பெயர்ச்சி (θ₂ - θ₁) விரைவாகக் குறைகிறது. எனவே, ஓரளவுக்கு விரைந்து தற்சுழலும் ஒரு பம்பரத்திற்கு அச்சுச் சுழற்சியுடன் கூடவே நொடிப்பு இடப் பெயர்ச்சியும் மிகக் குறைவாக இருக்கும். மேலும், பம்பரம் தரையோடு தொடும் புள்ளியில் உள்ள உராய்வினால், இந்த நொடிப்பு இடப் பெயர்ச்சி கண்ணுக்கே தெரிவதில்லை. அந்நிலையில் பம்பரம் நொடிப்பின்றிச் சீரான அச்சுச் சுழற்றியுடன் இயங்குவதாகவே தோன்றுகிறது. —மு. சேக் முஸ்தபா துணை நூல். H. Goldstein, Classical Mechanics, Addison Wesley, Second Edition, 1980."}}