{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dp5wqwcy/", "data": {"id": "dp5wqwcy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dp5wqwcy/", "kind": "article", "headword": "அடையாறு", "romanization": "aṭaiyāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:18.591645+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சென்னையின் தென்பகுதியிலுள்ள ஒரு சுற்றுப்பட்டு.", "body_ta": "சென்னையின் தென்பகுதியிலுள்ள ஒரு சுற்றுப்பட்டு. அடையாறு என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு அடையாறென்றே பெயர் அமைந்தது. 1747-ல் இவ்விடத்தில் பிரெஞ்சுக்காரருக்கும் ஆர்க்காட்டு நவாபிற்கும் நடந்த போரில் பிரெஞ்சுக்காரர் வெற்றியடைந்தனர். பிரம்மஞான சபையாரின் உலகத் தலைமைக் காரியாலயம் இங்கே இருக்கிறது. அடையாற்றின் கரையில் உள்ள பெரிய ஆலமரம் உருவில் மிகப் பெரிதாயிருப்பது பற்றி உலகப்புகழ் பெற்றது."}}