{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dber5jeq/", "data": {"id": "dber5jeq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dber5jeq/", "kind": "article", "headword": "அளகைச் சம்பந்தர்", "romanization": "aḷakaic campantar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:40.327939+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; துறவியாக விளங்கியவர்; அளகை என்ற ஊரில் தோன்றியவர்.", "body_ta": "கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; துறவியாக விளங்கியவர்; அளகை என்ற ஊரில் தோன்றியவர். சைவ வணிக மரபில் தோன்றிய இவர் தக்க பருவத்தில் கல்வி பயின்று, இராமநாதபுர மாவட்டக் குன்றக்குடியை அடுத்துள்ள துழாவூர்ச் சைவத் திருமடத்தின் தலைவராக விளங்கிய நிரம்ப அழகிய தேசிகரிடம் சமய தீக்கை முதலியாவும் சந்நியாசமும் பெற்றார். இவர் நிரம்ப அழகிய தேசிகருக்குக் குருவாக விளங்கிய கமலை ஞானப் பிரகாசர்பால் சென்று அவரிடத்துச் சீடராக விளங்கினார். இவர் தம் குருவொடு திருவாரூரில் இருந்த போது அவ்வூர்ப் பெருமக்களின் விருப்பத்திற்கிசைந்து திருவாரூர்ப் புராணத்தினைப் பாடினார். இப்புராணத்திற்கு முதல்நூல் வடமொழிக் காந்த புராணத்திலுள்ள நாகர காண்டம் என்னும் பகுதியாகும். இந்நூல் கி.பி. 1592–ஆம் ஆண்டில் பங்குனி உத்தர நாளன்று, திருவாரூர் ஆலயத்திலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் அரங்கேற்றப் பெற்றது. இவரியற்றிய திருவாரூர்ப் புராணம் 111 சருக்கங்களும் 2929 பாடல்களும் கொண்டது."}}