{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d9tncvcy/", "data": {"id": "d9tncvcy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d9tncvcy/", "kind": "word", "headword": "ஆன்மக்கொள்கை மறுப்பு", "romanization": "āṉmakkoḷkai maṟuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:04.334566+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரை ஆன்மா என்பது வைதிக சமயநூல் வழக்கு. சைவ சித்தாந்தம் இதனைச் சதசத்து எனக்குறிக்கும். \"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா (நூ பா 3) சத்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது\" (நூபா 4) \"இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா\" (நூபா 7) சிவஞான போதத்தில் மேற்குறித்த மூன்று பாக்களிலும் ஆன்மா என்னும் சொல் வருகின்றது. ஆன்மா உண்டு என்று மெய்கண்டார், வாதங்களில் தலை சிறந்ததான சற்காரிய வாதத்தினால் நிலை நாட்டுவது அவர்தம் பேரறிவினைக் காட்டுகிறது. அவர்தம் கொள்கை மறுப்புச் சுருக்கம் பின்வருமாறு: 1.\"இலது என்றலின் ஆன்மா உளது.\" இங்குப் பெளத்தரின் சூன்யவாதம் மறுக்கப்படுகிறது. 2.\"எனதுடல் என்றலின் ஆன்மா உளது.\" இங்குத் தேகான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 3.\"ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது.\" இங்கு இந்திரியான்ம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 4.\"ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது.\" இங்கு உலகாயதரில் ஒருசாரரான சூக்குமதேகான்ம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 5.\"கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது.” இங்குப் பிராணான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 6.\"உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது.\" இங்குப் பிராணான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 7.இவ்வாறு உண்டு என்று நிறுவப்பட்ட ஆன்மா உடம்பினுள் உள்ளது. அவ்வுடம்பின் இயல்பை 'மாயா இயந்திரதனு’ என்று மெய்கண்டார் குறிப் பிடுகிறார். இங்குச் சமூகான் மாவாதிகள் கொள்கை மறுக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 53"}]}}