{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d8th6rk8/", "data": {"id": "d8th6rk8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d8th6rk8/", "kind": "article", "headword": "அலிகினி மலைத் தொடர்", "romanization": "alikiṉi malait toṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.564161+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்கே உள்ள அப்பலேச்சிய மலைத் தொடரின் பகுதியே அலிகினி மலைத்தொடர்.", "body_ta": "அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்கே உள்ள அப்பலேச்சிய மலைத் தொடரின் பகுதியே அலிகினி மலைத்தொடர். தென்மேற்கில் நடு பென்சில்வேனியாவிலிருந்து மேற்கு மேரிலாந்து, மேற்கு வர்சீனியாவின் கிழக்கு, மேற்கு வர்சீனியா ஆகியவற்றின் வழியாக இம்மலைத்தொடர் செல்கிறது. இது வடக்கில் கடல் மட்டத்திற்குமேல் 610 மீட்டர் வரை உயர்ந்தும்,\n\nஅலிகினி மலைத்தொடர்\n\nதெற்கில் 1460 மீட்டர் வரை உயர்ந்தும் இருக்கிறது. அலிகினி மலைத் தொடரின் மிக உயர்ந்த உச்சியின் பெயர் இசுபுரூசு நாப் என்பதாம். இதன் உயரம் 1482 மீட்டர்கள். இம்மலையுச்சி மேற்கு வர்சீனியாவில் உள்ளது."}}