{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d7g4n8em/", "data": {"id": "d7g4n8em", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d7g4n8em/", "kind": "word", "headword": "விஃபேட்", "romanization": "viḵpēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.238764+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெய்நிகர் கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் Virtual File Allocation Table stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95 இயக்கமுறைமையில், வட்டுகளை அணுகுவதற்கு, நிறுவத்தகு கோப்பு முறைமை மேலாளர் (installable File System Manager - IFS Manager) மென்பொருளின் கீழ் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை இயக்கி மென் பொருள் இது. விஃபேட், எம்எஸ்-டாஸ் வட்டுகளுடன் ஒத்தியல்பானது. ஆனாலும் அதைவிட வேகமாகச் செயல் படக்கூடியது. விஃபேட் 32-பிட் குறிமுறையைப் பயன்படுத்து கிறது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் இயங்கக்கூடியது. வட்டு இடைமாற்றாக விகேஷ் (Vcache) -ஐப் பயன்படுத்துகிறது. நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கிறது", "needs_definition": false, "gloss_en": "VFAT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1530"}]}}