{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d5zzk7hd/", "data": {"id": "d5zzk7hd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d5zzk7hd/", "kind": "article", "headword": "ஆரினாக்கோ", "romanization": "āriṉākkō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.011159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தென் அமெரிக்காவில் நீளத்தில் நான்காவது ஆறு.", "body_ta": "தென் அமெரிக்காவில் நீளத்தில் நான்காவது ஆறு. பிரேசில் எல்லையின் அருகில் வெனிசூலாவிலுள்ள பாரிமா பீடபூமியில் தோன்றிக் கரிபியன் கடலில் சேர்கிறது. கடலிற் சேருமுன் 100 மைல் தொலைவில் டெல்டாவாகப் பிரிகிறது. டெல்டா 5.000 ச.மைல் பரப்புடையது. ஆறு 1,500 மைல் நீளம். முகத்துவாரத்திலிருந்து உள்ளே 260 மைல் தொலைவுவரை நீராவிக் கப்பல்கள் செல்லும். ஆரினாக்கோ ஆற்றுவாணிபத்தின் கேந்திர நகரம் சியூடாட்பாலிவர்."}}