{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d4wte67k/", "data": {"id": "d4wte67k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d4wte67k/", "kind": "article", "headword": "அல்செசுடிசு", "romanization": "alcecuṭicu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.032515+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கிரேக்கப் புராணக் கதையில் வரும் தெசலி நாட்டு அரசன் அட்மிட்டசின் (Admetus) மனைவி.", "body_ta": "கிரேக்கப் புராணக் கதையில் வரும் தெசலி நாட்டு அரசன் அட்மிட்டசின் (Admetus) மனைவி. அட்மிட்டசுக்காக வேறு எவரேனும் தமது உயிரைக் கொடுத்தாலொழிய அவன் இறக்க வேண்டும் என்று விதியிருந்தது. முதியவர்களான தம் உயிரைக் அவன் பெற்றோர் அவனுக்காகத் கொடுக்க முன் வந்திலர். அல்செசுடிசு (Alcestis) தன்னுயிரைக் கொடுத்துத் தன்கணவரின் உயிர் காக்க முன் வந்தாள். அட்மிட்டசு உயிர்த்து எழ எழ அல்செசுடிசின் உயிர் போய்க் கொண்டிருந்தது. அத்தருணத்தில் எர்குலிசு (Hercules) வந்து எமனுடன் போராடி அவனை வென்றான். அல்செசுடிசு உயிருடன் எழுந்தாள், இப்புராணக் கதையினை யுரிப்பிரிபீசு (Euripripisu) என்னும் கிரேக்கக்கவி நாடகமாக எழுதியுள்ளார்."}}