{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cqmbqqfd/", "data": {"id": "cqmbqqfd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cqmbqqfd/", "kind": "word", "headword": "சிறுநீரக வடிப்பி", "romanization": "ciṟunīraka vaṭippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:07.836531+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துகிறது; சோடியம், பொட்டாசியம் போன்ற மின் பகு பொருள்களையும் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் அமில, காரச் சமநிலையைப் பேணுகிறது. குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், பாஸ்ஃபேட், பைகார்பனேட், புரதங்கள் ஆகியவற்றின் சரியான அளவைப் பேணுகிறது. யூரியா, யூரிக் அமிலம், கிரியாடினின் சல்ஃபேட் போன்ற கழிவுப் பொருள்களை அகற்றுகிறது. இயல்பான இரத்த உற்பத்திக்குத் தேவையான எரித்ரோப்பாய்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "nephron", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சிறு நீரகக் கூறு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 726"}]}}