{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cphgmban/", "data": {"id": "cphgmban", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cphgmban/", "kind": "word", "headword": "அளவை முறைகள்", "romanization": "aḷavai muṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:01.608045+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறர் கொள்கைகளை மறுத்துரைக்கவும் தன் கொள்கைகளை நிலை நாட்டவும் இவை பயன்படுபவை. மெய்கண்டார் பிற சமயத்தார் கூற்றுகளை இம் முறைகளில் நுணுகி ஆராய்ந்து மறுப்பது போற்றி மகிழ்தற் குரியது. அளவை விளக்கம் : அளவை பற்றிய தமிழ் நூல். மறைஞான தேசிகர் தம் கூற்றுகளுக்கு இதிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். இதில் இடம் பெறுவன: 1. பிரமாணம் 2. சிற்சித்தி 3.பிரத்தியட்சம் 4 அனுமானம் 5.சப்தப்பிரமாணம் 6.அறிவின் ஏற்புடைமை 7 அன்யதாக்கியாதி 8. மெய்ம்மைக் கொள்கை அளவை பற்றிய விளக்கம் : சைவசித்தாந்த நூல்களில் சிவ ஞான சித்தியாரில்தான் முதன் முதலாக அளவை பேசப்படுகிறது. இதனையடுத்துத் தத்துவப் பிரகாசத்திலும் (14 ஆம் நூற்றாண்டு) பின்னர்ச் சிவாக் கிர யோகியர் இயற்றிய சிவநெறிப் பிரகாசத்திலும் (16 ஆம் நூற்றாண்டு) அளவை கூறப் பெறுகிறது. மறைஞான தேசிகளும் சிவாக்கிரயோகியாரும் அளவை என்னும் சொல்லுக்கு ஒரே வகையிலேயே விளக்கங் கூறுகின்றனர். சிவாக்கிரயோகியர் தரும் சற்றுக் கூடுதலான விளக்கம் பின்வருமாறு. “அளவை என்பது அளந்தறியப்படுவது. அஃது எவ்வாறாகும் எனின்? உலகத்துப் பதார்த்தங்களை எல்லாம் அளக்குமிடத்து எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறு போலப்பதி,பசு, பாசம் முதலிய பொருள்களைப் பக்குவான்மாக்களுக்கு அளந்து அறிவிக்கையின் பொருட்டு அளவைப் பிரமாணங்கள் முதற்கண் கூறியது அறிக. அல்லாமலும் தர்க்க யுத்தியாயுள்ளவையும் இந்த அளவையினாலேயே சொல்லப்படுவது அறிந்து அர்த்தப்பிரயோகம் பண்ண வேணுமாகையால் முதற்கண் கூறியதெனவும் அறிக” சிவஞான சித்தியாருக்கு உரை செய்த அறுவருள் மறைஞான சம்பந்த தேசிகரும் சிவாக்கிர யோகியரும் அடங்குவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 34"}]}}