{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cp44jrvc/", "data": {"id": "cp44jrvc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cp44jrvc/", "kind": "article", "headword": "அஸ்டிரக்கான்", "romanization": "asṭirakkāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.784949+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Astrakhan) கிழக்கு ரஷ்யாவில் வால்கா நதியிலுள்ள ஒரு பெரிய தீவில் அமைந்துள்ள நகரம்.", "body_ta": "(Astrakhan) கிழக்கு ரஷ்யாவில் வால்கா நதியிலுள்ள ஒரு பெரிய தீவில் அமைந்துள்ள நகரம். பண்டை நாளில் தார்த்தார் இராச்சியத்தின் தலைநகராயிருந்து 1395-ல் தைமூரால் அழிக்கப்பட்டது. இப்போதுள்ளது 1558-ல் உண்டாக்கப்பெற்றது. இது ஒரு முக்கியமான வியாபாரத்தலம். பெரும்பாலும் இங்கிருந்துதான் காஸ்பியன் கடலில் பிடிக்கும் மீன் முழுவதும் சோவியத் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மக் : 2,54,000 (1939)."}}