{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cnexgyyu/", "data": {"id": "cnexgyyu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cnexgyyu/", "kind": "article", "headword": "நோய் விளைவிக்காதவை", "romanization": "nōy viḷaivikkātavai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.441425+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நோய் உண்டாக காரணி, ஓம்புயிர், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகிய மூன்று கூறுகள் தேவை.", "body_ta": "நோய் உண்டாக காரணி, ஓம்புயிர், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகிய மூன்று கூறுகள் தேவை. நோய் உண்டாகும் முன்பு நோய் மறைகாலம் (incubation period) என்னும் கட்டம் இருக்கிறது. நுண்ணுயிரோ, மீநுண்ணுயிரோ உடலினுள் சென்றவுடன், நோயை உண்டாக்குவதில்லை. சில காலத்திற்குப் பின்னரே, நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. நோய்க் காரணி உட்சென்று, நோயின் அறிகுறிகள் தோன்றும் வரையிலான கட்டம், நோய் மறைகாலம் எனப் படுகிறது.\n\nநோய்க் காரணிகள் உயிரியல் காரணிகள். மீநுண்ணுயிர், ரிக்கெட்சியா, கிளாமைடியா, மைக்ரோபிளாஸ்மா, நுண்ணுயிரி, சுருளுயிரி, புரோடோசோவா, காளான், குடற்புழு.சத்துக் காரணி. கொழுப்புப் பொருள், புரதம், மாவுப் பொருள், வைட்டமின், களிமண்,நீர்.\n\nவேதி காரணி. உடலின் உள்ளிருந்து வருபவையாக யூரியா (யூரியா மிகை குருதி), பிலிரூபின்(காமாலை), யூரிக் அமிலம் (கீல் வாதம்), கால்சியம் கார்பேனேட், (சிறுநீரகக் கற்கள்) ஆகியவையும், உடலின் வெளியேயிருந்து வருபவையாக, ஒவ்வாமைப் பொருள், உலோகங்கள்,ஆவி, தூசி,வளிமம், நுண்ணுயிர்க் கொல்லி ஆகியவையும் விளங்குகின்றன.\n\nஇயற்பியற் காரணி. தட்பவெப்பம், புழுக்கம், அழுத்தம், கதிர் வீச்சு, ஒலி, மின்னாற்றல்.\n\nயாந்தீரிகக் காரணிகள். நாட்பட்ட உறுத்தல், காயம், எலும்பு முறிவு, சுளுக்கு இடப் பெயர்ச்சி.\n\nவேதிக் கூறுகள். இன்சுலீன், ஈஸ்ட்ரஜன் போன்ற ஹார்மோன், நொதி.\n\nஓம்புயிரின் பங்கு. வயது, பால்,இனம், மரபு நுட்ப இயல், மணமான நிலை, செய்தொழில், தடுப்பாற்றல் தன்மை, சமூக நிலை, கல்வித் தரம், வாழ்க்கை நிலை, பயணம் ஆகியனவும் நோயூக்குகின்றன.\n\nஇதயக் குருதி நாள நோய், இரைப்பைப் புண், குருதி மிகு அழுத்தம் போன்ற நோய்களுக்குக் காரணமே தெரியவில்லை. நோய்த் தாக்கத்திலிருந்து விடுபடப் பின் வரும் கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும். அவை உடல் நல ஊக்குவிப்பு, குறிப்பிட்ட பாதுகாப்பு, விரைவாக நோய் அறுதியிடல், மருத்துவம், நோயால் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்த்தல், மறுசீரமைப்பு.\n\nஒருவருக்கு நோயூக்கும் நுண்ணுயிரி மற்றவருக்கு நோயூக்க முடியாது. ஆகவே, நுண்ணுயிரிகளை நோயூக்க வல்லவை, நோயூக்க இயலாதவை எனப் பிரிக்க முடியாது. நோய் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை, நுண்ணுயிர் வீரியத் தன்மை, நோயாளியின் தடுப்பாற்றல் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே நோயுண்டாகிறது. —மு.ப. கிருஷ்ணன்"}}