{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ck2njrrd/", "data": {"id": "ck2njrrd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ck2njrrd/", "kind": "word", "headword": "மெய்ப் பாங்கு", "romanization": "meyp pāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:08.576828+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன் டெல் 80x86 குடும்ப நுண்செயலி களில் செயல்படுத்தப்படும் இயக்கப் பாங்கு. மெய்ப்பாங்கு முறையில் செயலியானது ஒரு நேரத்தில் ஒரு நிரலை மட்டுமே இயக்க முடியும். 1 எம்பி நினைவகத்துக்கு மேல் அணுக முடியாது. ஆனால் முதன்மை நினைவகத்தையும், உள்ளீட்டு/ வெளியீட்டு சாதனங்களையும் தாராளமாக அணுக முடியும். 8086 செயலியில் மெய்ப்பாங்கு மட்டுமே உண்டு. எம் எஸ் டாஸ் இயக்க முறைமை மெய்ப்பாங்கில் மட்டுமே செயல்படும். இதற்கு மாறாக 80286 மற்றும் பிறகு வந்த நுண்செயலி களில் பாதுகாக்கப்பட்ட பாங்கு (Protected Mode) அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யமுடியும். விண் டோஸ் இயக்க முறைமை போன்ற பல்பணி இயக்க முறைமைகள் இதில் செயல்படும். இதற்குத் தேவை யான நினைவக மேலாண்மை மற்றும் நினைவகப் பாதுகாப்பினை பாதுகாக்கப்பட்ட பாங்கு வழங்குகிறது", "needs_definition": false, "gloss_en": "real mode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 380"}]}}