{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/chu5y7qh/", "data": {"id": "chu5y7qh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/chu5y7qh/", "kind": "word", "headword": "பெரியசாமித் தூரன்", "romanization": "periyacāmit tūraṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.327470+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர். சைவ சமயத்தினர். நன்கு எழுதும் திறனும் பேசும் திறனும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தொடர்பு கொண்டு, கலைக்களஞ்சியம் என்னும் நூலை வெளியிடுவதில் தலைமைபூண்டு அதனைச் செவ்வனே நடத்தி வருபவர். இதுவரையில் நான்கு வால்யூம்களை வெளியிட்டுள்ளார். இவர் சுப்பிரமணிய பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரைகளை ஒருங்கு சேர்த்து வெளியிட்டிருப்பது தமிழ் மொழிக்கு ஆக்கம் தருவதாகும். இவர் ஆண்டு மலர்களிலும் திங்கள் தாள்களிலும் பல கட்டுரைகளையும், தமிழ்இசைச் சங்கச் சார்பில் பண்ணைப் பற்றி ஆய்ந்து எழுதிய கட்டுரையும் எழுதியுள்ளவர். பல உரைநடை நூற்களின் ஆசிரியர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 646"}]}}