{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cfg3bpqk/", "data": {"id": "cfg3bpqk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cfg3bpqk/", "kind": "word", "headword": "குமிழி வரிசைப் படுத்தல்", "romanization": "kumiḻi varicaip paṭuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:55.858227+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப் பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முறை. இந்த முறையில் nஉறுப்புகள் உள்ள பட்டியலில் ஒர் உறுப்பு n-1உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டு மிகச்சிறிய உறுப்பு, பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது. இச்செயல்முறை அடுத்தடுத்துள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மேற் கொள்ளப்படுகிறது. அடிப்பாகத்திலிருந்து எடை குறைந்த காற்றுக் குமிழ் உந்தியுந்தி நீரின் மேற் பரப்புக்கு வருவதுபோல குறைந்த மதிப்புள்ள உறுப்பு பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது", "needs_definition": false, "gloss_en": "bubble sort", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 188"}]}}