{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cbbawha2/", "data": {"id": "cbbawha2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbbawha2/", "kind": "word", "headword": "நிரலர் விசை", "romanization": "niralar vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.150594+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் இருக்கும் இணைப் பொத்தான்கள். கணினியை மீட்டியக்கவும் (reboot), இயக்க முறைமையின் அடிநிலைச் செயல்பாட்டில் கட்டளைவரி இடைமுகத்துக்கு மாறவும் இந்தப் பொத்தான்கள் பயன்படுகின்றன. தொடக்கக் காலங்களில் மென்பொருளை பரிசோதிக்கும் நிரலர்களுக்கே இத்தகைய செயல்பாடுகள் தேவைப்பட்டன. எனவே மெக்கின்டோஷின் தொடக்க மாதிரியங்களில் கணினிப் பெட்டியின் உள்ளே இந்தப் பொத்தான்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பிற்காலக் கணினிகளில் அவை வெளிப்படையாகவே வைக்கப்பட்டன. மீட்டியக்கு பொத்தான் இடப்புறம் திரும்பிய முக்கோணக்குறியாலும் மற்றது ஒரு வட்டக்குறியாலும் குறிக்கப் பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "programmers switch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிரலர் நிலைமாற்றி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1177"}]}}