{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cad4xuj6/", "data": {"id": "cad4xuj6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cad4xuj6/", "kind": "article", "headword": "அப்பாலோ", "romanization": "appālō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:19.489440+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அப்பாலோ (Apollo) கிரேக்கக் கடவுளாகிய ஜூஸ் (Zeus) மகன்; ஒளி, கவிதை, உடல் நலம், ஆணழகு ஆகியவற்றின் தேவதை ; பிற்காலத்தில் சூரிய தேவதையாகக் கருதப்பட்டான்.", "body_ta": "அப்பாலோ (Apollo) கிரேக்கக் கடவுளாகிய ஜூஸ் (Zeus) மகன்; ஒளி, கவிதை, உடல் நலம், ஆணழகு ஆகியவற்றின் தேவதை ; பிற்காலத்தில் சூரிய தேவதையாகக் கருதப்பட்டான். ரோமானியர்கள் கி. மு. 280-ல் 90 அடி. உயரமான ஒரு சிலை செய்தனர். அது உலக அதிசயங்கள் ஏழனுள் ஒன்றாகக் கருதப்பட்டது; கி. மு. 226-ல் பூகம்பத்தால் கீழே விழுந்தது. அராபியர் 653-ல் ரோம் நகரைக் கைப்பற்றியபோது அதை உலோகமாக விற்றனர்."}}