{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c7hmp5bm/", "data": {"id": "c7hmp5bm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c7hmp5bm/", "kind": "article", "headword": "ஆஸ்திரலேசியா", "romanization": "āstiralēciyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.897340+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆஸ்திரலேசியா: தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தென் கிழக்காகச் சென்றால் பசிபிக் சமுத்திரத்தில் காணப்படும் தீவுகளை இச்சொல் முன்பு குறித்தது.", "body_ta": "ஆஸ்திரலேசியா: தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தென் கிழக்காகச் சென்றால் பசிபிக் சமுத்திரத்தில் காணப்படும் தீவுகளை இச்சொல் முன்பு குறித்தது. இப்போது இதில் ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, மலேயாத் தீவுத்தொகுதி, பிலிப்பீன் தீவுகள், மெல்னீசியா, மைக்ரொனீசியா, பாலினீசியா என்பனவும் அடங்கும். ஹவாய் தீவுகளையும் அன்டார்க்டிக்காவையுங்கூட இதில் சேர்க்கிறார்கள்."}}