{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bzu2n3ns/", "data": {"id": "bzu2n3ns", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bzu2n3ns/", "kind": "article", "headword": "நைட்ரைடு", "romanization": "naiṭraiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.042794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நைட்ரஜனும், மற்றொரு தனிமமும் இணைந்து உருவாக்கும் சேர்மம் நைட்ரைடு ஆகும்.", "body_ta": "நைட்ரஜனும், மற்றொரு தனிமமும் இணைந்து உருவாக்கும் சேர்மம் நைட்ரைடு ஆகும். அஸைடு (azide) வகைச் சேர்மங்களிலும் நைட்ரஜன் இருந்தாலும், பிணைப்பு முறையால் வேறுபட்டிருப்பதால், அவை தனிப் பிரிவாக அமைகின்றன. ஹைட்ரஜன், ஹாலோஜன்கள், ஆக்சிஜன் தொகுதித் தனிமங்கள் ஆகியன நைட்ரஜனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மங்களும், நைட்ரைடுகளினின்றும் வேறுபட்டவையே. நைட்ரஜனை விட, எலெக்ட்ரான் கவர் திறன் (electronegatirity) குறைவான தனிமங்களுடன் இணைந்து, நைட்ரஜன் உருவாக்கும் சேர்மங்களே நைட்ரைடுகள் எனப் படும்.\n\nI A தொகுதி உலோகங்கள், நைட்ரஜடன் வினையுற்று அஸைடுகளை உண்டாக்குகின்றன. அவற்றை எச்சரிக்கையுடன், வெடித்து விடாதபடிச் சூடாக்கினால், உரிய நைட்ரைடுகள் Li₃N, Na₃N, K₃N, Rb3N, Cs₃N ஆகியன கிடைக்கும். நைட்ரைடுகளை 400°C அளவுக்குச் சூடாக்கினால், நைட்ரஜன் வளிமமும், உலோகத் தனிமங்களும், தனித் தனியே பிரித்து விடுகின்றன. நைட்ரைடுகள் நீருடன் வினையுற்றால், அம்மோனியாவும் உரிய உலோக ஹைட்ராக்சைடுகளும் கிடைக்கப் பெறுகின்றன.\n\nlI A தொகுதி உலோகங்களை, நைட்ரஜனுடன் வினைப் படுத்தி B (Be₃N₂, Mg₃N₂, Ca₃N₂, Sr₃N₂, Ba₃N₂), ஆகிய நைட்ரைடுகளைத் தயாரிக்கலாம். அம்மோனியாவுடன் உலோகங்களை உயர் வெப்ப நிலையில் வினைப் படுத்தியும், அவற்றைத் தயாரிக்கலாம். உலோக அமைடுகளைச் சூடாக்கி, நைட்ரை டுகளைப் பெறுவது என்பது எளிதான முறையாகக் கருதப் படுகிறது. \\begin {align} N_2 + 3Be &\\rightarrow Be_3N_2 \\\\ 2NH_3 + 3Be &\\rightarrow Be_3N_2 + 3H2 \\\\ 3Ba(NH_2)_2 &\\rightarrow Ba_3N_2 + 4NH_3 \\end {align} திண்மங்களான நைட்ரைடுகள் 1000°C வெப்ப நிலைக்குச் சூடாக்கப் பட்டால், பெரும்பாலான நைட்ரைடுகள் இளகி, நைட்ரஜன் வளிமமாகவும், தனிம உலோகங்களாகவும் பிரிகின்றன. பெரில்லியம் நைட்ரைடு இந்த வினையில் ஈடுபட, 2200°C அளவுக்கு வெப்பப் படுத்தப் பட வேண்டியுள்ளது. இவை நீருடன் வினையுற்று, அம்மோனியாவையும், உலோக ஹைட்ராக்சைடுகளையும் உருவாக்குகின்றன.\n\nlIl A தொகுதி உலோகங்கள், லாந்தனைடுகள் உலோகங்கள், ஆக்ட்டினைடு உலோகங்கள் ஆகியவற்றின் நைட்ரைடுகள் 1500°C வெப்ப நிலை வரை நிலைத்திருக்கின்றன. IVA, VA தொகுதி உலோக நைட்ரைடுகளும், அவ்வாறு நிலையானவையே. ஆனால், VIA, VIIA தொகுதி உலோக நைட்ரைடுகள், முன்னவற்றை விட நிலைப்புக் குறைவானவை. இவை அனைத்துமே, அவ்வவ் தொகுதி உலோகங்கள் நைட்ரஜனுடன் நேரடியாகவே இணைந்து உருவானவை. வெவ்வேறான அணுக் கூறு அளவுகளில், அவை நைட்ரஜனுடன் இணைந்து, ஒரே தனிமம் பல்வேறு நைட்ரைடுகளை உருவாக்கும் வாய்ப்பும் உண்டு. அவை ஒவ்வொன்றும் சூடாக்கப்பட்டால், பிரிகை வினையின் போது, நைட்ரஜனை வெளிப் படுத்துகின்றன.\n\nVIIIA தொகுதி உலோக நைட்ரைடுகளின் நிலைப்புத் தன்மை குறைவேயாகும். உலோகங்களை அம்மோனியாவுடன் வினைப் படுத்தி, இப்பிரிவு நைட்ரைடுகள் தயாரிக்கப் படுகின்றன. நிக்கல் நைட்ரைடு 450°C வெப்ப நிலையிலேயே சிதைந்து விடுகிறது.\n\nAg, Au, Hg, TI, Sn, Pb, Sb, Bi ஆகிய உலோகங்களின் நைட்ரைடுகளை உருவாக்குவதில்லை. —ருத்ர. துளசிதாஸ்"}}