{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bzhujbqz/", "data": {"id": "bzhujbqz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bzhujbqz/", "kind": "word", "headword": "பாலசுப்பிரமணிய முதலியார்", "romanization": "pālacuppiramaṇiya mutaliyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.297601+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் ஒரு வழக்கறிஞர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். சைவசமய நூல்களிலும், சித்தாந்த சாத்திரங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும நல்ல பயிற்சியுடையவர். இவரது அரிய முயற்சியினால் சைவ சித்தாந்த சமாஜ வெளியீடாகப் பன்னிரு திருமுறைகளும் வெளிவந்தன. அவற்றின் வெளியீடே ஒரு தனிமதிப்புடையது. சங்க நூல் தொகுப்பும். தொல்காப்பியப் பதிப்பும் இவரது முயற்சியினால் வெளிவந்தனவே. ஆங்கிலத்திலும் தமிழிலும் சைவ சமயக் கருத்துக்களை எழுதியும் பேசியும் வருபவர். மூவர் தேவார அடங்கன் முறையினை இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளதன் மூலம் இவருக்கு அத்தேவாரத்தில் உள்ள பரந்த அறிவைப் புலப்படுத்தியுள்ளார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தையும் இவர் பதிப்பித்துள்ளார். அது போது தம்மை மயிலை மாதவதாஸன் என்று குறிப்பிட்டுக் கொண்டனர். இவர் உள்ளதை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 645"}]}}