{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bs7uc9w8/", "data": {"id": "bs7uc9w8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bs7uc9w8/", "kind": "word", "headword": "சிவப்புப் புத்தகம்", "romanization": "civappup puttakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.902723+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமை உருவாக்கிய தர வரையறை ஆவணங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. நம்பத்தகுந்த கணினி அமைப்புகளின் மதிப்பாய்வு அடிப்படையின் நம்பத்தகுந்த பிணையப் பொருள் விளக்கம் என்பது இப்புத்தகத்தின் தலைப்பு. (Trusted Network Interpretation of the Trusted Computer System Evaluation Creteria). நம்பத்தகுந்த பிணைய பொருள்விளக்கம் என்கிற ஆவணமும் உண்டு. கணினி அமைப்புகளை A1 முதல் D வரை தரப்படுத்துவதற்கான வரையறுப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. A1 என்பது மிகவும் பாதுகாப்பானது. D என்பது பாதுகாப்பற்றது. மிகவும் உயிர் நாடியான தரவுவைப் பாதுகாப்பதில் ஒரு கணினிப் பிணையத்துக்கிருக்கும் திறனை இத்தரவரிசை குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "Red Book", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செம்புத்தகம்", "செந்நூல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1228"}]}}