{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bqu3g4md/", "data": {"id": "bqu3g4md", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bqu3g4md/", "kind": "word", "headword": "சித்தாத்த சாத்திரம்", "romanization": "cittātta cāttiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.514508+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைவசித்தாந்த சார்பான 14 நூற்களின் தொகுதியே சித்தாந்த சாத்திரம் எனப்படும். இதுவே மெய்கண்ட நூல் என்னும் கூறப்படும் சிறப்பு வாய்ந்தது. இத்தொகுப்பில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது. உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிக்கலி வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை விளக்கம், சங்கற்ப நிராகரணம் அடங்கியுள்ளன. பதி, பசு, பாசங்களை பற்றிய குறிப்புக்கள், பஞ்சாட்சர மாண்பு, சுத்தாத்துவித சைவசமய மேம்பாடு முதலானவற்றை அறியத் துணைசெய்யும் தொகுப்பு நூல். இப்பதிநான்கு நூற்களையும் ஒன்று சேர்த்துத் தருமபுர ஆதீனத்தார் வெளியிட்டுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 491"}]}}