{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bdstc9ap/", "data": {"id": "bdstc9ap", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bdstc9ap/", "kind": "article", "headword": "அலெக்சாந்தர், முதலாம்", "romanization": "alekcāntar, mutalām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.708426+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செர்புகள், குரோவாட்டுகள், கலோவீன்கள் போன்றோர் வாழ்ந்த பகுதிகளுக்கு 1921-ஆம் ஆண்டு அரசரானார்.", "body_ta": "செர்புகள், குரோவாட்டுகள், கலோவீன்கள் போன்றோர் வாழ்ந்த பகுதிகளுக்கு 1921-ஆம் ஆண்டு அரசரானார். 1918-ஆம் ஆண்டு நாகரிகத்திலும் பண்பாட்டிலும் ஒற்றுமை மிகுந்த இம்மக்கள், ஒன்றிணைந்து யூகோசுலாவியா என்னும் புதிய நாட்டினை உருவாக்கினர். அலெச்சாந்தர் செர்பு இனத்தைச் சார்ந்தவர். செர்பு இனத்தைச் சார்ந்த ஒருவனே புதிய நாட்டை ஆளத் தகுதி உள்ளவன் என இவர் நம்பினார். இதனைப் பிற இனத்தவர் வெறுத்தனர். எனவே அலெக்சாந்தர் 1929-ஆம் ஆண்டு நாட்டின் அமைதியின்மையைப் போக்க இராணுவ உதவியுடன் சருவாதிகாரியானார். 1931–இல் சட்டமன்ற ஆட்சியை மீண்டும் நிறுவினார். எனினும் இவருக்கு எதிராக நாட்டில் கலகங்கள் தொடர்ந்தன. பிரான்சின் குடியரசுத் தலைவரைக் காண 1934–ஆம் ஆண்டு பிரான்சிற்குச் சென்றபொழுது இவர், சில குரோவாட்டுத் தீவிரவாதிகளால் மார்சேல்சில் சுட்டுக் கொல்லப்பட்டார்."}}