{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bd655z4s/", "data": {"id": "bd655z4s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bd655z4s/", "kind": "article", "headword": "உசுதாத் ஈசா", "romanization": "ucutāt īcā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.168629+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பாரசீக நாட்டைச் சார்ந்த சிற்பி.", "body_ta": "பாரசீக நாட்டைச் சார்ந்த சிற்பி. சாசகான் மொகலாயப் பேரரசராக இருந்த காலத்தில் தம் மனைவி மும்தாசு மகாலின் நினைவாகத் ‘தாசுமகால்’ என்னும் கலைக்கோயிலைக் கட்டினார். அந்நினைவுச் சின்னத்தின் சிற்பியாக அமர்த்தப்பட்டவரே உசுதாத் ஈசா என்பவர். இரா.அ."}}