{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bb858zfj/", "data": {"id": "bb858zfj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bb858zfj/", "kind": "article", "headword": "உணவு சேகரிக்கும் பழங்குடிகள்", "romanization": "uṇavu cēkarikkum paḻaṅkuṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.443694+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை மனிதல் பல நூறாயிரம் ஆண்டுகட்டு முன்பே மேற்கொண்டான்.", "body_ta": "வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை மனிதல் பல நூறாயிரம் ஆண்டுகட்டு முன்பே மேற்கொண்டான். ஏறத்தாழ முப்பத்தைந்தாயிரம் முதல் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சிக்கலான தொழில் முறையைக் கொண்ட வேட்டையாடும் மனிதக் குழுக்கன் காணப்பட்டன. உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் திறனற்ற மனிதக் குழுக்கள் வேர்கள், பழங்கள், சிறு பூச்சிகள் முதலான இயற்கைப் பொருட்களைச் சேகரித்துப் பசியினைத் தணித்துக் கொண்டன. உணவு சேகரிக்கும் பழங்குடியினர் உணவு சேகரித்தலைத் தலையாய தொழிலாகக் கொண்டனர். அது அவர்களின் வாழ்க்கை ஆதாரத் தொழிலாகத் திகழ்வதாலேயாம். இந்தியா முழுமையிலும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு சேகரிக்கும் பழங்குடியினர் காணப்படுகின்றனர்.\n\nஉத்தரப் பிரதேசத்தின் இராசி (Raji) பழங்குடியினர், மத்திய இந்தியாவின் மலைக் காரியர்கள் (Hill Khariyas), பீகாரின் பீர்கார் (Birhor), ஒரிசாவின் சுவாங்குகள் (Juangs), மத்திய பிரதேச மாவட்டத்தைச் சேர்ந்த மரியா கோண்டுகள் (Maria Gonds), ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செஞ்சு (Chenchu), ஏனாதி (Yanadi), தமிழ் நாட்டைச் சேர்ந்த காடர் (Kadar), மலைப் பண்டாரம் (Malaipandaram), பளியர் கேரள மாநிலத்தின் மலபார் பகுதியைச் சேர்ந்த அரண்டர்கள் (Arandars), குறும்பர்கள் (Kurumbas), அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒஞ்சியினர் (Ongo), சாரவர் (Jarawas), செண்டிநலியர் (Sentinelese), சோம்பன் (Shompen) நிக்கிகோபாரியர் ஆகியோரும் வேட்டையாடலும் உணவு சேகரித்தலும் தொழிலாகக் கொண்ட பழங்குடியினராவர்.\n\nஆசுத்திரேலியாவின் ஆதிக்குடிகளுக்கும், ஆப்பிரிக்கப் புசுமன் (Bushmen) பழங்குடியினருக்கும் பாலைநிலச் சூழல் புகலிடம் அளிக்கிறது. நீண்ட குளிர் காலத்தைக் கொண்ட வடதுருவப் பிரதேசத்- தில் அடர்ந்த உரோமங்களைக் கொண்ட விலங்குகளை வேட்டையாடும் நாசுகேப்பிப் (Nascapi) பழங்குடியினரும் குறிப்பிடத்தக்கவர்.\n\nஉணவு சேகரிக்கும் பழங்குடியினரின் வாழ்க்கை முறை மிக எளிமையானதாகவே காணப்படுகிறது. பெரும்பாலும் இவர்கள் தம் குடியிருப்பில் குறைந்த எண்ணிக்கையிலான குடிசைகளைக் கொண்டிருப்பர். பரந்த அளவில் வெவ்வேறு இடத்தில் காணப்படும் இச்சமுதாயத்தினரிடையே குறிப்பிட்ட சமூக அமைப்புக் காணப்படுகிறது. ஒரு குழுவினைச் சார்ந்தவன் மற்றொரு குழுவினைச் சார்ந்த பெண்ணை மணக்க வேண்டும் என்பதே பொதுவான நியதியாகும். பெரும்பாலும் தந்தையிடம் தங்கும் குழு அமைப்பே இப்பழங்குடியினரிடையே காணப்படுகிறது. இவ்வமைப்பு ஒருவரின் தாய், தாயின் தாய், தந்தை, தந்தையின் தந்தை என்ற கால் வழியில் உறவுமுறைக் குழுவினராகவும் வாழிடப் பரப்பை ஒன்றாகக் கொண்டு வாழும் குழுவினராகவும் ஒரே எல்லையில் வேட்டையாடுபவராகவும் காணப்படுவதால், இவர்களிடையே குழு ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.\n\nசிறுவயது முதலே தாங்கள் வசித்து வரும் இடத்திலிருக்கும் விலங்குகளைப் பற்றி இப்பழங்குடியினர் நன்கறிந்திருப்பதால், வேட்டையாடுதல் இவர்களுக்கு எளிதாகிறது. வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக உள்ளன. இவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலும் தனியாகவோ கூட்டாகவோ செய்யப்படுகின்றன. பொதுவாக அனைத்துக் குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே உற்பத்திக் குழுவாகப் பொருள்களைச் சேகரிக்கின்றனர்.\n\nஇப்பழங்குடியினர்தம் வாழிடத்திற்கு அருகிலுள்ள பரந்த காடுகளிலிருந்து வேட்டையாடல், மீன் பிடித்தல், காட்டுப் பொருள்களைச் சேகரித்தல் முதலானவையே இவர்களது வாழ்க்கை ஆதாரப் பெருள்களாகும். வேட்டையாடி உணவு சேகரித்தலும், வேர்கள், கிழங்குகள், காய்கள், பழங்கள், கொட்டைகள், பூக்கள், இலைகள், கயிறு திரிப்பதற்கான நார்கள், மரப்பட்டைகள், தீப்பொறி உண்டு பண்ணும் கற்கள், மூங்கில், தேன், மெழுகு ஆகியவற்றைச் சேகரித்தலும் இப்பழங்குடியினரின் சமுதாய வாழ்க்கையாக அமைந்துள்ளன.\n\nதோண்டும் கழிகள், இரும்பினாலான சுத்திகள், மண், மரம், மூங்கில் முதலானவற்றால் செய்யப்பட்ட பானைகள், கூடைகள் போன்றவற்றை உணவு சேகரிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். பறவைகள், விலங்குகள் வேட்டையில் வெவ்வேறு வகையான பொறிகளையும் கண்ணிகளையும் இப்பழங்குடியினர் பயன்படுத்துகின்றனர். மேற்கு வங்கத்தைச் சார்ந்த இலோதாப் (Lodhas) பழங்குடியினர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்கு குழிப் பொறியினையும், காடரும் செஞ்சுப் பழங்குடியினரும் வேட்டைக்கென நாய்களையும் பயன்படுத்துகின்றனர். கயிறு, நூல், மூங்கில் முதலானவற்றால் செய்யப்பட்ட வலைகளையும் ஈட்டிகளையும் கழிகளையும் கொண்டு மீன் பிடிக்கின்றனர். பெரும்பாலும் இக்கருவிகள் பழங்குடியினராலேயே செய்யப்படுகின்றன. சில சமயம் வாரச் சந்தையிலிருந்தும் அருகில் வசிக்கும் பிற பழங்குடியினரிடமிருந்தும் இவை பெறப்படுகின்றன. கோயரும் (Koyas), செஞ்சுப் பழங்குடியினரும் கிழங்குகளையும் வேர்களையும் தோண்டுவதற்குக் கொத்துக் கருவியைக் கையாளுகின்றனர். ஏனாதியர் வயல் வரப்பினைத் திறப்பதற்கும் இதனையே கையாள்கின்றனர்.\n\nபொதுவாக, தேன் சேகரித்தலில் ஆடவர் ஈடுபடுகின்றனர். மார்ச்சு, மே மாதங்களின் வறட்சியான நேரங்களில் உயர்ந்த மரங்களிலும் பாறைகளிலிலுமுள்ள தேன் கூடுகளிலிருந்து தேன் சேகரிக்கப்படுகின்றது. காடரும் பிற தென்னிந்தியப் பழங்குடியினரும் உயர்ந்த மரங்களில் ஏறுவதற்காக மர அம்பையும் மூங்கிலையும் பயன்படுத்துகின்றனர். பாறைகளிலுள்ள தேனைச் சேகரிக்கும்பொழுது கயிறு வழிச் செல்பவனின் மனைவியுடைய சகோதரன் ஏறுபவன் கீழே வீழா வண்ணம் கயிற்றினை இறுகப் பற்றிக் கொள்கிறான். ஏறுபவன் மரணம் அடைய நேர்ந்தால், கயிற்றினை பிடித்துக் கொண்டிருந்தவன் இறந்தவனின் மனைவியைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்னும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.\n\nஉணவு சேகரிக்கும் பழங்குடியினரிடையே கூட்டு வேட்டைக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியாகப் பல சடங்குகளும் பழக்கங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வேட்டைக்குச் செல்வதற்கு முதல் நாள் கருவிகள் சேகரிக்கப்பட்டு, மறுநாள் அவர்கள் கூட்டமாகக் காட்டுக்குச் செல்கின்றனர். வேட்டையில் வெற்றியுடன் திரும்புதற்குக் கொடிய விலங்குக் கடவுளையும் தேவதைகளையும் வணங்குகின்றனர். குரங்கு வேட்டையின்போது பல பெரிய வலைகள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கட்டப்பட்டு அரைவட்ட வடிவில் அமைக்கப்படுகின்றன. சிலர் வலையருகில் நிற்க, மற்றவர்கள் குரங்குகள் அமர்ந்துள்ள மரத்தினைத் தாக்கி அவற்றை வலையை நோக்கி ஓடச் செய்கின்றனர்.\n\nசீவாங்கும் பழங்குடியினர் வேட்டையாட உதவிய கருவிகளைக் காட்டிலேயே வழிபட்டுப் பின் அவற்றை உரியவரிடம் சேர்ப்பிக்கின்றனர். வெற்றியுடன் வேட்டையாடியவனை ‘இராசா’ என அழைத்து மாலையிட்டு, அவன் தலையைச் சுற்றித் தலைப்பாகை கட்டுகின்றனர். வேட்டையாடப்பட்ட விலங்கிணை எடுப்பதற்கு முன், அதன் உடம்பிலிருந்து சிறிதளவு இரத்தம் அவர்களுடைய மூதாதையருக்கு உரித்தாக்கப்படுகிறது. பின்னர் அதன் உடல் மூதாதையரின் வீட்டிற்கு அல்லது அருகிலுள்ள அருவிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வேட்டையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. விலங்கினைக் கொன்றவனுக்குப் பொதுவாக அளிக்கப்படும் பங்குடன் அவ்விலங்கின் பின்னங்கால்களும் அளிக்கப்படுகின்றன.\n\nதனிப்பட்டோர் குளத்தில் பெருமளவில் நஞ்சு கலந்து மீன்பிடித்தலை மேற்கொண்டனர். பெரிய மீன்களைப் பிடித்தற் பொருட்டு ஒரு குறிப்பிட்ட உறவு முறையைச் சார்ந்தோர் அல்லது குறிப்பிட்ட வாழிடத்தைச் சார்ந்தோர் கூட்டாகவே செல்கின்றனர்.\n\nஅசாமைச் சார்ந்த குக்கிப் (Kuki) பழங்குடியினரின் வாழ்க்கைக்கு ஆதாரமாக மூங்கில் திகழ்கிறது. மூங்கில் தட்டிகளையும் இலைகளையும், கொண்டு இவர்களின் குடிசை அமைக்கப்படுகிறது. ஒரேயிடத்தில் நிலையாகத் தங்கும் இவர்கள் தங்கள் குடியிருப்புகளை மூங்கில் கழிகளின் மேல் அமைத்துள்ளனர். கூடைகள், பாய்கள், புகையிலைக் குழல், மீன் பிடிக்கும் வலைகள், விலங்குகளைப் பிடிக்கும் வலைகள் ஆகியவற்றை மூங்கிலைக் கொண்டு தயாரிக்கிறார்கள். சுவைக்காக மூங்கில் முளைகளை (Shoots) அரிசியுடன் கலந்து கொதிக்க வைக்கிறார்கள்.\n\nபீகாரைச் சார்ந்த பிர்கார்ப் பழங்குடியினர் ஒரே சமயத்தில் நாடோடி வாழ்க்கையினையும் ஒரேயிடத்தில் குடியிருத்தலையும் மேற்கொண்டு, தனிப்பட்ட முக்கியத்துவும் உடையவராய்த் திகழ்கின்றனர். இவர்கள் பொருளாதாரத்தின் ஆறில் ஐந்து பாகங்கள் காட்டிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. இவர்கள் பழங்கள், இலைகள் ஆகியவற்றைச் சேகரிப்பதற்கும் முயல், குரங்கு போன்ற மிருகங்களை வேட்டையாடுவதற்கும் காட்டையே அழிக்கவும் செய்கின்றனர். இவர்கள் வருமானத்திற்கு அடிப்படையாகத் திகழும் கயிறு திரித்தல், மரத்தால்\n\nஓங்கிப் பழங்குடியினர் - மீன்பிடித்தல் பாத்திரங்கள் செய்தல் ஆகியவற்றிற்குத் தேவையான நாரினையும் மரத்துண்டுகளையும் சேகரிப்பதற்கும் குரங்குகளை வேட்டையாடுவதற்கும் கூட்டமாகச் செல்கின்றனர்.\n\nஇப்பழங்குடியினரிடையே நரமாமிசம் உண்ணும் பழக்கம் காணப்படுகிறது. தங்கள் உறவுமுறையைச் சார்ந்தோரை அதிலும் இறக்கும் தறுவாயிலுள்ள தாய், தகப்பன் போன்றோரை மட்டும் உண்கின்றனர்.\n\nநல்ல மலையிலும், கிழக்கு மலைத் தொடர்ச்சியிலும், கிருட்டிணா நதியின் தென்புறத்திலும், பெண்ணையாற்றின் வடபகுதியிலும் காணப்படும் ‘செஞ்சுப்’ பழங்குடியினரின் பொருளாதாரம் இவர்கள் வாழ்விடங்களைச் சுற்றியுள்ள காடுகளையே முதன்மையாகச் சார்ந்திருக்கிறது. மீன்பிடித்தலும் சிறு அளவில் மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக இரண்டு முதல் பத்துப்பேர் வரை தேன் சேகரித்தவில் ஈடுபடுகின்றனர். தானியங்கள், மரவள்ளிக்கிழங்கு, காட்டுவேர்கள் ஆகியவற்றைத் தோண்டும் கழிகளால் எடுக்கின்றனர். காகம், ஓணான் கரடி, மயில், கருங்குரங்கு முதலியவற்றை வேட்டையாடுகின்றனர். இலுப்பை மரத்தின் பூவையும் மொட்டுகளையும் புளியம்பழத்தையும் மிகவும் விரும்பியுண்கின்றனர். வறட்சிக் காலங்களில் மூங்கில் அரிசியினை உணவாகப் பயன்படுத்துகின்றனர். தங்கள் தேவைக்காகக் குளத்தை நஞ்சுபடுத்துவதற்கோ காட்டை அழிப்பதற்கோ இவர்கள் தயங்குவதில்லை.\n\nஇப்பழங்குடியினரிடையே நடைபெறும் திருமணம், சூரியன் சரியாக 12 மணிக்கு நடு உச்சியை அடையும் போது ‘அபிசி’ இலக்கினத்தில் (Abhijit Lagna) நடத்தப்படுகின்றது. ஓர் அம்பினைச் செங்குத்தாக நிலைநிறுத்தி அதன் நிழல் எங்கும் விழாத போது சரியான நேரத்தைக் கணிக்கின்றனர்.\n\nகேரளக் காடுகளில் வசிக்கும் காடர் பழங்குடியினர் ஒரேயிடத்தில் பத்து அல்லது பன்னிரண்டு குடிசைகளில் வசிக்கின்றனர். இவர்கள் உணவில் வேர்ப் பொருள்களும் கிழங்கு வகைகளும் முதன்மை இடத்தை வகிக்கின்றன. தேன் சேகரித்தல் இவர்களது துணைத் தொழிலாகும். தேன் சேகரிப்பில் ஈடுபடும் குழுவின் முனைப்பான உறுப்பினர் இறக்க நேரிட்டால் அக்குழுவைச் சார்ந்த பிற உறுப்பினர் இறந்தவரின் மனைவியையும் குடும்பத்தையும் ஆதரிக்கக் கடமைப்பட்டவராகிறார். இவர்கள் வேட்டைக்கென நாய்களைப் பயன்படுத்துகின்றனர்.\n\nகள்ளிக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரண்டன் பழங்குடியினர் காட்டில் கிடைக்கும் பொருள்களைச் சேகரித்தல், மூங்கில்களை வெட்டுதல், பாம்புகளைப் பிடித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வாழ்கின்றனர். மலைப்பாம்பின் தோலையும் கொழுப்பையும் விற்கின்றனர். இப்பழங்குடியினர் தன் மாமிசத்தைச் சுவையான தின்பண்டமாகப் பயன்படுத்துகின்றனர்.\n\nகோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் காட்டிலிருந்து இடைக்கப்பெறும் மீன், வேர், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.\n\nகோட்டயம் கொல்லம் மாவட்டங்களிலும் சபரி மலைக் காடுகளிலும் காணப்படும் வேட்டையாடுவோரும் உணவு கேகரிப்போருமாகிய மலைப்பண்டாரம் என்னும் பழங்குடியினர் சிறுசெடிகள், வேர்கள், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றனர். அய்ய பன்னா (Ayya Panna) எனப்படும் ஒருவகை நெட்டியைத் தேனுடன் கலந்துண்கின்றனர். ஆமைகளையும் மீன்களையும் பிடித்துண்கின்றனர். அம்பு, வில், ஊதுகோல், ஈட்டி முதலியவற்றாலும், பொறி வைத்தல், சுருக்கிடுதல், கண்ணி வைத்தல் ஆகிய முறைகளாலும் வேட்டையாடுகின்றனர். தற்காலிக வாழிடமாக இவர்கள் குகைகளிலும் பெரிய பாறைக் குடைவுகளிலும், மரப்பொந்துகளிலும் வசிக்கின்றனர். சக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு நெருப்புண்டாக்கும் இப்பழங்குடியினர் மரப்பட்டைகளை ஆடையாக அணிகின்றனர். இவர்கள் மலை, மரம், ஓடை ஆகியவற்றை வழிபடுகின்றனர். இறந்தோரை எரிக்கவோ புதைக்கவோ செய்யாமல் அந்தந்த இடத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.\n\nஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் சல்லாயேனாதியர் மீன்களையும் பாம்புகளையும் பிடிப்பதில் அறிவுக் கூர்மையுடையராய்த் திகழ்கின்றனர். செங்குத்தான பாறையின் கீழ்ப்புறத்திலிருந்து 100 அடிக்குக் கீழே மூங்கில் கயிற்றின் உதவியால் ஊசலாடித் தேன் சேகரிப்பது இவர்கள் அஞ்சாநெஞ்சிற்கோர் எடுத்துக்காட்டாகும். இப்பழங்குடியினர் வயல் எலிகள், நண்டு, பெருச்சாளி ஆகியவற்றை உண்பதாலும், சுத்தமற்ற பழக்க வழக்கங்களாலும் தீண்டத்தகாதோராகக் கருதப்படுகின்றனர். இவர்கள் மூலிகைகளைக் கண்டறிவதிலும், விலங்குகளை அவற்றின் காலடிச் சுவடுகளைக் கொண்டு அறிவதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்களாயிருக்கின்றனர். ம.ந.பு.\n\nதுணை நூல்கள்\n\nLee, R.B., and Devore, I., Man the Hunter, Aldine, Chicago, 1968.\n\nFürer Haimendorf, C. Von, Tribes of India, Oxford University Press, Delhi, 1982.\n\nThurston, E., Castes and Tribes of Southern India, Vol. 1–7, Madras Government Press, Madras, 1909."}}